புதுபொலிவுடன் உருவாகும் பிரதமரின் இணையதளம் : 6 சர்வதேச, 22 இந்தியா மொழிகளில் புதிய வடிவம்..!

இந்தியா

புதுபொலிவுடன் உருவாகும் பிரதமரின் இணையதளம் : 6 சர்வதேச, 22 இந்தியா மொழிகளில் புதிய வடிவம்..!

புதுபொலிவுடன் உருவாகும் பிரதமரின் இணையதளம் : 6 சர்வதேச, 22 இந்தியா மொழிகளில் புதிய வடிவம்..!

பிரதமர் மோடியின் இப்போதைய இணையதளம் 12 இந்திய மொழிகளில் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதை மறுவடிவமைப்பு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக இணையதள வடிவமைப்பில் அனுபவமும் தகுதியும் வாய்ந்த நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தேசிய மின்னணு நிர்வாக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பிரதமர் மோடியின் புதிய இணையதளம் ஐ.நா.,சபையால் அங்கீகரிக்கப்பட்ட அராபிக், சைனீஸ், ஆங்கிலம், பிரெஞ்ச், ரஷ்யன் மற்றும் ஸ்பானிஷ் ஆகிய 6 மொழிகள் மற்றும் 22 இந்திய அலுவல் மொழிகளில் கையாளும் வகையில் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நிறுவனம் பிரதமரின் இணையதளத்தை பராமரிக்கவும் வேண்டும். இதற்கு தேவையான உள்ளடக்கங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வேர்டு/பிடிஎப் வடிவத்தில் வழங்கப்படும்.

இந்த உள்ளடக்கம் மேற்குறிப்பிட்ட அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு இடம்பெற வேண்டும். இந்த இணையதளம் அனைத்து பிரபல சமூக ஊடகங்களுடனும் ஒருங்கிணைக்கப்பட்டிருக்க வேண்டும். சமூக ஊடகங்களில் பிரதமர் பதிவிடும் தகவல்களும் இந்த புதிய இணையதளத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும்.

புதிய இணையதளத்தை வடிவமைப்பது தொடர்பாக வரும் 30-ம் தேதிக்குள் தங்கள் விருப்பத்தை தெரிவிக்க வேண்டும்.

Leave your comments here...