ஊதியம் இல்லா விடுப்பு – 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : ஏர் இந்தியா விமானிகள் குழு வலியுறுத்தல்!
- July 24, 2020
- jananesan
- : 922
- AirIndia
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவத் தொடங்கியதை அடுத்து, வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்க ‘வந்தே பாரத்’ திட்டம் வடிவமைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை, ஏர் இந்தியா விமானங்கள் மூலம்தான் மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது.
“வந்தே பாரத் திட்டத்துக்காக, அந்தத் திட்டத்தின் முன்னணியில் நின்றவர்கள் மிகப் பெரிய விலையைக் கொடுத்தார்கள். இந்நாள் வரை வந்தே பாரத் திட்டத்தில் ஈடுபட்ட விமானிகளில் குறைந்தபட்சம் 60 விமானிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா விமானிகள் குழு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரிக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: கொரோனா தொற்று காரணமாக வெளி நாடுகளில் சிக்கி தவித்து வந்த இந்தியர்களை மீட்டு வருவதற்காக மத்திய அரசு வந்தே பாரத்திட்டத்தை செயல்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 137 நாடுகளில் இருந்து 5,03,990 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.இந்தியர்களை அழைத்து வரும் பணியில் ஈடுபட்ட ஊழியர்களில் 60 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.அதில் உறுதி படுத்தப்பட்டது.
இப்படியான சூழலில் மத்திய அரசு, ஏர் இந்தியா நிறுவன ஊழியர்களுக்கு சுமார் 75 சதவீதம் வரையிலான ஊதியக் குறைப்பை அறிவித்துள்ளது. இது விமானிகளின் குடும்பங்களில் மிகச் சிக்கலான பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். அரசின் இந்த முடிவானது பாரபட்சமாகவும், சட்டத்துக்குப் புறம்பாகவும் உள்ளது. இந்த முடிவால் ஊழியர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவார்கள். அது மிகத் தீவிர நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும். இதைக் கடந்த கால செயல்பாடுகளும் உணர்த்தியுள்ளன” என்று விமானிகள் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave your comments here...