சீனாவில் கடை மூடும் டிக்டாக் நிறுவனம் : தலைமையகத்தை லண்டனுக்கு மாற்ற பேச்சுவார்த்தை..?

உலகம்

சீனாவில் கடை மூடும் டிக்டாக் நிறுவனம் : தலைமையகத்தை லண்டனுக்கு மாற்ற பேச்சுவார்த்தை..?

சீனாவில் கடை மூடும் டிக்டாக் நிறுவனம் : தலைமையகத்தை லண்டனுக்கு மாற்ற பேச்சுவார்த்தை..?

இந்தியாவின் லடாக்கின் கல்வான் பகுதியில் ஐந்து வாரங்களாக இந்திய – சீன படைகள் முகாமிட்டிருந்த நிலையில்,( ஜூன்15) மாலையில், திடீரென மோதல் ஏற்பட்டது. சீன ராணுவம் நடத்திய அட்டூழிய தாக்குதலில், நம் வீரர்கள், 20 பேர் வீரமரணம் அடைந்தனர். எல்லையில் உள்ள நிலையை மாற்றியமைக்க முயன்ற நம் ராணுவத்திற்கு பதிலடி கொடுத்தனர். இதில் 43 சீன வீரர்கள் உயிரிழந்தனர். இதனால், இரு நாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி இந்தியாவில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் டிக்டாக், ஹலோ, ஷேர் இட் உள்பட சீனாவுடன் தொடர்புடைய 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.மேலும் இந்த நிறுவனம் சீனாவில் உள்ளதால் அந்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் படி சீன அதிகாரிகள் டிக்டாக்கிடம் இருந்து பயனாளர்களின் தரவை பெருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது. இதனால் உலக அளவில் டிக்டாக் செயலியை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை கனிசமாக குறையத் தொடங்கியுள்ளது. இது அந்த நிறுவனத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே உலக மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் தனிமனித தகவல்கள் பாதுகாக்கப்படும் என டிக்டாக் தெரிவித்து வருகிறது. இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சீனாவில் உள்ள தனது தலைமையகத்தை லண்டனுக்கு மற்ற டிக்டாக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது டிக்டாக் தனது தலைமையகத்தை சீனாவிலிருந்து லன்டனுக்கு மாற்ற முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும், இது தொடர்பாக இங்கிலாந்து அரசிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.தலைமையகத்தை லண்டனுக்கு மாற்றுவதன் மூலம் உலக மக்களிடையே நம்பிக்கையை பெற முடியும் எனவும் நிறுவனத்தில் பணியாளர்களில் அளவை அதிகரிக்க முடியும் எனவும் டிக்டாக் நம்புவதாக கூறப்படுகிறது.

Leave your comments here...