கிருஷ்ணரையும் அவதூறாக பேசினார்கள் – கருப்பர் கூட்டம் மீது தமிழ்நாடு கிருஷ்ணன் வக இளைஞர் டிரஸ்ட் புகார்..!

தமிழகம்

கிருஷ்ணரையும் அவதூறாக பேசினார்கள் – கருப்பர் கூட்டம் மீது தமிழ்நாடு கிருஷ்ணன் வக இளைஞர் டிரஸ்ட் புகார்..!

கிருஷ்ணரையும் அவதூறாக பேசினார்கள் – கருப்பர் கூட்டம் மீது தமிழ்நாடு கிருஷ்ணன் வக இளைஞர் டிரஸ்ட் புகார்..!

கிருஷ்ணரையும் அவதூறாக பேசினார்கள் – கருப்பர் கூட்டம் மீது தமிழ்நாடு கிருஷ்ணன் வக இளைஞர் முன்னேற்ற டிரஸ்ட் புகார் அளித்துள்ளார்கள். நாத்திக கருத்துகளை பரப்புவது போல சிலர், ‘கருப்பர் கூட்டம்’ என்ற, ‘யூ டியூப் சேனல்’ நடத்தி வருகின்றனர்.அதில், ஆபாச புராணம் என்ற பெயரில், கந்தசஷ்டி கவசத்தை கேவலமாக சித்தரித்து, இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில், வீடியோ வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து, இது போன்ற கருத்துகளை பரப்பிவருகின்றனர்.

இந்து கடவுளான முருகப் பெருமானை போற்றி, 19ம் நுாற்றாண்டில், கந்தசஷ்டி கவசம் பாடப்பட்டுள்ளது. முருகப்பெருமானிடம் மனம் உருக பாடப்பட்டும் பாடல்களை, அருவருக்கத்தக்க வகையில் கொச்சைப்படுத்தி இருப்பது, தண்டனைக்குரிய குற்றம். அந்த சேனலை நடத்துபவர்களின் நோக்கம், ஹிந்துக்களையும், அவர்கள் வழிபடும் கடவுள்களையும் கொச்சைப் படுத்துவதாகவே உள்ளது. மத மோதல்களை ஏற்படுத்தி, சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்க முயலும் மர்ம நபர்கள் மீது, சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அந்த யூ டியூப் சேனலை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும். அதன் நிர்வாகிகளை, கைது செய்ய வேண்டும் என பாஜக இந்து இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி தமிழகம் முழுவதும் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் நிர்வாகிகள், நிகழ்ச்சி தொகுப்பாளர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

சுரேந்தர் நடராஜன் மற்றும் அவரது கூட்டாளிகளை, தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.அதன்பேரில், அரியாங்குப்பம் காவல் நிலையத்துக்கு வந்த சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல் உதவி ஆணையா் பிரபாகரன் தலைமையிலான போலீஸாா், சுரேந்தரைக் கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றனா். இதையடுத்து சுரேந்தர், சென்னை ராயபுரத்தில் மாஜிஸ்திரேட் ரோஸ்லின் துரை இல்லத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை 30 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் கிருஷ்ணரையும் அவதூறாக பேசினார்கள் – கருப்பர் கூட்டம் மீது தமிழ்நாடு கிருஷ்ணன் வக இளைஞர் டிரஸ்ட் புகார் அளித்துள்ளார்கள். தமிழ்நாடு கிருஷ்ணன் வக இளைஞர் முன்னேற்ற சங்கம் ட்ரஸ்டின் சார்பாக குலதெய்வமான பகவான் ஸ்ரீகிருஷ்ணரை மிக கீழ் தரமாக விமர்சித்தும், தமிழ் கடவுள் முருக பெருமானின் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி அவதூறு பரப்பி சிறுமைப்படுத்திய கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலை நிரந்தரமாக தடை செய்தும்,அதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய கோரி தலைவர் பத்மகுமார், பொதுச்செயலாளர் நீலகண்ட சுதன், மற்றும் நிர்வாகிகள் இரணியல் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கபட்டது.

அந்த புகார் மனு:-

Leave your comments here...