சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை : பார்சல்களில் போதை மாத்திரைகள் கடத்தல் – இருவர் கைது…!

தமிழகம்

சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை : பார்சல்களில் போதை மாத்திரைகள் கடத்தல் – இருவர் கைது…!

சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை : பார்சல்களில்  போதை மாத்திரைகள் கடத்தல் – இருவர் கைது…!

சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் நெதர்லாந்தில் இருந்து வந்த எல்.எஸ்.டி ஸ்டாம்ப், எக்ஸ்டசி மாத்திரைகள் மற்றும் எம்.டி.எம்.ஏ படிகங்களைக் கைப்பற்றினர்

போதைப்பொருள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் நெதர்லாந்தில் இருந்து சென்னை அயல்நாட்டு அஞ்சல் அலுவலகத்துக்கு வந்த இரண்டு அஞ்சல் பார்சல்களை சென்னை விமானநிலைய சுங்கத் துறையினர் கைப்பற்றினர். முதல் பார்சலைத் திறந்த பார்த்த போது உள்ளே டிவிடி உறை இருந்தது. தீவிர பரிசீலனையில் உள்ளே இருந்த பிளாஸ்டிக் பவுஞ்ச்சின் 3 ஷிப் லாக் பைகளில் 25 எல்.எஸ்.டி ஸ்டாம்ப், 31 ஊதா நிற எம்.டி.எம்.ஏ மாத்திரைகள் மற்றும் எம்.டிஎம்.ஏ வெண்மை நிறப் படிகங்கள் ஆகியன மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது.


இந்த ஊதா நிற மாத்திரைகளில் கொக்கோ கோலா அடையாளம் முத்திரையிடப்பட்டு ஒவ்வொன்றும் 200 மில்லி கிராம் எடை கொண்டதாக இருந்தது. பொதுவாக பைசைக்கிள் டே மற்றும் ஹாஃப்மன் என்று அழைக்கப்படும் இந்த எல்.எஸ்.டி ஸ்டாம்புகளில் 33மைக்ரோ கிராம் எல்.எஸ்.டி இருந்தது. இரண்டாவது பார்சலை பிரித்துப் பார்த்த போது அதில் 100 ஊதா நிற மாத்திரைகளும் 8 கிராம் வெண்மை நிறப்படிகமும் இருந்தன. இவை இரண்டுமே எம்.டி.எம்.ஏ என்ற போதைப் பொருளாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த மாத்திரைகள் பொதுவாக ‘DHL-LKW’ என்று அழைக்கப்படும். இவை போதைப் பொருள் வடிவத்திலும் 297 மி.கிராம் எம்.டி.எம்.ஏ கொண்டதாகவும் இருக்கின்றன. இதுவரைக் கைப்பற்றியதில் அதிதீவிர மாத்திரைகளாக இவை உள்ளன. மொத்தமாக ரூ.6 லட்சம் மதிப்புள்ள 131 எம்.டி.எம்.ஏ மாத்திரைகள் 14 கிராம் எம்.டி.எம்ஏ படிகங்கள் மற்றும் 25 எல்.எஸ்.டி ஸ்டாம்புகள் ஆகியவை எம்.டி.பி.எஸ் சட்டம் 1985இன் கீழ் கைப்பற்றப்பட்டன.

இந்தப் பார்சல்கள் சென்னை நகரின் 2 தனித்தனி நபர்களின் முகவரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த முகவரிகளில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தலில் இவர்களின் பங்கு குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

சென்னை விமானநிலைய சுங்கத்துறையினர் எல்.எஸ்.டி (லைசர்ஜிக் ஆசிட் டைஎத்தில்அமிட்) ஸ்டாம்புகளை கைப்பற்றுவது இதுவே முதல்முறை ஆகும். அதிதீவிர மாயத்தோற்றங்களை ஏற்படுத்தும் போதை மருந்தான இதன் மருந்தளவு 25 முதல் 80 மைக்ரோ கிராம் (எம்சிஜி) ஆகும். பொதுவாக எல்.எஸ்.டி போதை மருந்தானது உறிஞ்சும் தாள்கள் மூலம் உறிஞ்சப்பட்டு அவை பல்வேறு வடிவமைப்புகளில் சிறிய தனித்தனியான மருந்தளவுகளில் ஸ்டாம்ப் வடிவில் வெட்டப்படும். எம்.டி.எம்.ஏ படிகம் என்பது எம்.டி.எம்.ஏவின் தூய கலப்பில்லாத வடிவம் ஆகும்.

Leave your comments here...