இன்று உலக எமோஜி தினம்.!

சமூக நலன்

இன்று உலக எமோஜி தினம்.!

இன்று உலக எமோஜி தினம்.!

இன்று உலக எமோஜி தினம் சமூக வலைதளங்களில் எமோஜிகளின் பங்கு அதிகம். வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எமோஜிகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. பேஸ்புக்கில் கமெண்டுகளுக்கு லைக்கிடும் முறை மட்டுமே இருந்தது. பின்னரே ஆங்கிரி, ஹா ஹா, ஹார்ட், வாவ், க்ரை ஆகிய எமோஜிகள் இடம்பெற்றன. இது நல்ல வரவேற்பை பெற்றது.

எமோஜி முதன்முதலில் ஜப்பானில் வானிலை அறிக்கைகள் வாசிக்கும்போது சின்ன சின்ன கிராபிக்ஸ் மூலம் செய்திகளை சொல்ல பயன்படுத்தி வந்தனர். 1990-களில் மொபைல் இண்டர்நெட் பிளாட்பார்ம் சுகிடா குரிடா என்பவரால் மொபைல் போன்களில் பயன்பாட்டுக்கு வந்தது.

முதன்முறையாக, 2002 ஆம் ஆண்டு ஜூலை 17-ஆம் தேதி எமோஜி காலண்டர் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வை முன்னிட்டு, 2014-ஆம் ஆண்டு முதல் ஜூலை 17-ஆம் தேதி உலக எமோஜி நாளாக கொண்டாடப்படுகிறது.உரையாடலில் முக்கிய இடத்தை பெற்றுள்ள எமோஜிகள், மஞ்சள் நிறத்தில் முகபாவங்களை காட்டும் எமோஜிகள், மனிதர்களின் முகபாவத்துடன் கூடிய எமோஜிகள் என பலவும் உள்ளன. இப்போது எமோஜிக்கள் போன்களில் மட்டுமல்ல சமூக வலைதளங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

எமோஜிகள் மூலம் பெரிய கதைகளையே இன்று சொல்லிவிடலாம் என்ற நிலை உள்ளது. சாட்களில் அதிகம் வார்த்தைகளை காட்டிலும் எமோஜிகள் இடம் பெறுகின்றன. ஜப்பானியர்களின் மொழியே சித்திர எழுத்துகள்தான் என்பதால், அவர்களே எமோஜிக்கு முன்னோடிகளாக உள்ளனர்.மொழி தேவையில்லை, பேசத்தேவையில்லை,நம்முடைய உணர்வுகளை எங்கோ இருக்கும் ஒருவருக்கு எமோஜு மூலம் கொண்டுசேர்த்துவிடலாம் என்பதே எமோஜிகளின் வெற்றியாக உள்ளது.

Leave your comments here...