இந்தியா – சீனா எல்லை – பதற்றத்தை தணிக்கும் வகையில், இரு படைகளும் முழுவதுமாக விலக்கி ஒப்புதல்..!

இந்தியாஉலகம்

இந்தியா – சீனா எல்லை – பதற்றத்தை தணிக்கும் வகையில், இரு படைகளும் முழுவதுமாக விலக்கி ஒப்புதல்..!

இந்தியா – சீனா எல்லை  – பதற்றத்தை தணிக்கும் வகையில், இரு படைகளும்  முழுவதுமாக விலக்கி ஒப்புதல்..!

இந்தியாவின் லடாக்கின் கல்வான் பகுதியில் ஐந்து வாரங்களாக இந்திய – சீன படைகள் முகாமிட்டிருந்த நிலையில்,( ஜூன்15) மாலையில், திடீரென மோதல் ஏற்பட்டது. சீன ராணுவம் நடத்திய அட்டூழிய தாக்குதலில், நம் வீரர்கள், 20 பேர் வீரமரணம் அடைந்தனர். எல்லையில் உள்ள நிலையை மாற்றியமைக்க முயன்ற நம் ராணுவத்திற்கு பதிலடி கொடுத்தனர். இதில் 43 சீன வீரர்கள் உயிரிழந்தனர். இதனால், இரு நாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, நாடு முழுவதும், சீன பொருட்களை (Boycott China) புறக்கணியுங்கள் என மக்கள் மத்தியில் சீனாவுக்கு எதிரான கோபம் பல இடங்களில் வெளிப்படுத்தப்பட்டது இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி இந்தியாவில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் டிக்டாக், ஹலோ, ஷேர் இட் உள்பட சீனாவுடன் தொடர்புடைய 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.இதற்கிடையே, நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், கடந்த, ஜூலை5ம் தேதி, சீன வெளியுறவு அமைச்சர், வாங்க் யீ உடன், தொலைபேசியில் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்க் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, சீன படைகள், 2 கி.மீ., திரும்பச் சென்றன.

இந்நிலையில் இரு தரப்பு படைகளை விலக்கி முழுவதுமாக கொள்வது குறித்து ராணுவ படைத் தளபதிகள் தலைமையிலான, நான்காவது கூட்டம், லடாக்கின் சுஷுலில், 15 மணி நேரம் நடந்தது. இதில் இரு நாடுகளும் ஒப்புக் கொள்ளும் வகையில், கண்காணித்து உறுதி செய்யும் வகையில், படைகள் திரும்பப் பெறும் நடவடிக்கை நடைபெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave your comments here...