கொரோனா பணியில் மேற்குவங்க மக்களால் பாராட்டப்பட்ட பெண் துணை கலெக்டர் மரணம்

இந்தியா

கொரோனா பணியில் மேற்குவங்க மக்களால் பாராட்டப்பட்ட பெண் துணை கலெக்டர் மரணம்

கொரோனா பணியில் மேற்குவங்க மக்களால் பாராட்டப்பட்ட பெண் துணை கலெக்டர் மரணம்

மேற்கு வங்காளத்தில் கொரோனா பணியில் பாராட்டப்பட்ட பெண் துணை கலெக்டர் மரணம் அடைந்தார். கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணியில் இவர் திறம்பட செயல்பட்டார் துணை கலெக்டர் தேவதத்தா ராய். ரெயில்களில் ஹூக்ளிக்கு திரும்பிய இடம் பெயர்ந்த தொழிலாளர்களை முகாம்களில் கொண்டு போய்ச்சேர்த்து, அந்த முகாம்கை-ளை சிறப்பாக நிர்வகித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்ற மேற்கு வங்காள மாநிலம், ஹூக்ளி மாவட்டத்தில் துணை கலெக்டராக தேவதத்தா ராய் (வயது 38) பணியாற்றிவர்.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் அவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டன. அதைத் தொடர்ந்து அவர் கொல்கத்தாவில் டம்டம் பகுதியில உள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டார். ஆனாலும் நேற்று முன்தினம் உடம்பு ரொம்ப மோசமாகிவிட்டது. மூச்சுவிட முடியவில்லை.

அதனால் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, தீவிரமான சிகிச்சை தந்தும் காப்பாற்ற முடியவில்லை. இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. தேப்தத்தா ராய்க்கு முதல்வர் மம்தா பானர்ஜி தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இருக்கிறார்.


தேவதத்தா ராய் அகாலமாக மரணம் அடைந்து விட்டார் என்ற தகவல் அறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன். இளம் அதிகாரியான அவர் முன்வரிசையில் நின்று கொரோனாவுக்கு எதிராக போரிட்டார். தனது கடமைகளை மிக சிறப்பாக அர்ப்பணிப்பு உணர்வுடன் நிறைவேற்றினார்” என தேவதத்தா ராயின் மறைவுக்கு மம்தா பானர்ஜி ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ளார்.

Leave your comments here...