கந்தசஷ்டி கவசத்தை, ஆபாசமாக சித்தரித்த கருப்பர் கூட்டம் : தமிழகம் முழுவதும் போலீசில் புகார் – விரைவில் கைது..!

சமூக நலன்தமிழகம்

கந்தசஷ்டி கவசத்தை, ஆபாசமாக சித்தரித்த கருப்பர் கூட்டம் : தமிழகம் முழுவதும் போலீசில் புகார் – விரைவில் கைது..!

கந்தசஷ்டி கவசத்தை, ஆபாசமாக சித்தரித்த கருப்பர் கூட்டம் : தமிழகம் முழுவதும் போலீசில் புகார் – விரைவில் கைது..!

கருப்பர் கூட்டம்” என்ற பெயரில் youtube சேனல் ஓன்றை சுரேந்தர் என்பவர் இயங்கி வருகிறார். அதில் இந்துக்கள் வழிபடும் கடவுள்களை ஆபாசமாக பேசி, புராண கதைகளை ஆபாச வார்த்தைகளால் சித்தரித்து தொடர்ந்து வீடியோ வெளியிடப்பட்டு வந்தது. குறிப்பாக தமிழ் கடவுள் முருகனின் கந்த சஷ்டி கவசத்தை மிகவும் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு உள்ளார்.

இது குறித்து நாடு முழுவதும் முருகா பக்தர்கள் மத்தியில் தொடர்ந்து கண்டன குரல் எழுந்தது வருகிறது.
மேலும் இது குறித்து இந்து முன்னணி விருகம்பாக்கம் தொகுதி செயலாளர் செந்தில் குமார் என்பவர் சென்னை மாநகர் காவல் ஆணையரிடம் புகார் அளித்து உள்ளார்.

அவர் அளித்து உள்ள அந்த புகார் மனுவில்:- நான் மேற்கண்ட விலாசத்தில் வசித்து வருகிறேன் நான் இந்து முன்னணி பேரியக்கத்தில் விருகம்பாக்கம் தொகுதி செயலாளராக சேவை செய்து வருகிறேன். நான் முருக பெருமானின் தீவிர பக்தன் ஆவேன். தினமும் முருக பெருமானை வழிபட்டு கந்த சஷ்டி கவசத்தை படித்தும் முருகப்பெருமான் அருளை பெற்று வாழ்ந்து வருகிறேன். இந்த சூழ்நிலையில் திரு சுரேந்தர் நடராஜன் என்பவர் ஒரு வீடியோவை தயார் செய்து அதில் நான் வணங்கும் முருகப்பெருமானையும் கந்த சஷ்டி கவசத்தையும் தவறாக பேசியும் தவறாக பொருள்படும் படியும் கருப்பர் கூட்டம் என்னும் YOUTUBE சேனலில் வெளியிட்டுள்ளார். தற்போது கூட கந்தர் சஷ்டி சவசத்தை கொச்சையாக விமர்சித்து இந்த கருப்பர் கூட்டம் எனும் YOUTUBE மூலம் திரு சுரேந்தர் நடராஜன் அவர்கள் வெளியிட்ட இந்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Link http://www.facebook.com/100003780336838/posts/2050677638101556/

மேற்கண்ட காணொளி, வேண்டுமென்றே என்னையும் இந்து சமயத்தை பின்பற்றுபவர்களின் மனதை புண்படுத்தும் நோக்கத்திலும், பகைமையை ஏற்படுத்தி பொது அமைதியை கெடுக்கும் நோக்கத்தில் எனது இந்து மத வழிபாடுகளையும் பக்கத்தில், எனது வழிபாடுகள் கொச்சைப்படுத்தியும், அவமானப்படுத்தியும் அதன் மூலமாக வேண்டுமென்றே மத உணர்வுகளை தூண்டி ஒரு குறிப்பிட்ட மதத்தினரை சினம் ஊக்கமூட்டும் நோக்கத்திலும், மத அமைதியை குலைக்கும் வகையில் கொச்சையான காட்சிப்படுத்துதல் மூலம் வேண்டுமென்றே மத ரீதியான எண்ணங்களையும். நம்பிக்கைகளையும் அவமானப்படுத்தும் நோக்கத்தில் வெளியிடும் வகையிலும், வேண்டுமென்றே அவமானப்படுத்தும் வகையில் காட்சிகளை காட்சிப்படுத்தி என்னையும் நான் பின்பற்றும் இந்து சமயத்தை அவமானப்படுத்தி, அசிங்கப்படுத்தி உண்மைக்கு புறம்பான அடிப்படை ஆதாரமற்ற, பொய்யான வதந்திகளை மக்களிடையே பரப்பி, அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை தூண்டி சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயர்ச்சிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

எனவே, மேற்குறிப்பிட்ட கருப்பர் கூட்டம் என்கிற சமூக வலைத்தள Channel-களை கையாள்பவர்கள் உரிமையாளர்கள், கொச்சையான வீடியோ களில் பேசியவரான திரு. சுரேந்தர் நடராஜன் மீது சட்டபடியான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மேலும் தமிழகம் முழுவதும் பாஜக, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்டோர் புகார் அளித்து வருகிறார்கள். எனவே கருப்பர்கூட்டத்தை நடத்தி வரும் சுரேந்தர் கைது செய்ய வாய்ப்பு என கூறப்படுகிறது.

Leave your comments here...