தாராவி குடிசைப்பகுதியில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதற்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு

இந்தியாஉலகம்

தாராவி குடிசைப்பகுதியில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதற்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு

தாராவி குடிசைப்பகுதியில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதற்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிராவில் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

உலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் தொடக்கத்தில் அதிகரித்து காணப்பட்ட கொரோனா தொற்று தற்போது கணிசமாக குறைந்து வருகிறது.இந்நிலையில், மும்பை தாராவி குடிசைப்பகுதியில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதற்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, தாராவியில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் குறைந்து இருப்பதற்கு மத்திய சுகாதாரத்துறை பாராட்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...