பிரதமரின் நிர்பந்தம் – கொரோனா தடுப்பூசியான கோவேக்சின் மருந்து : சீதாராம் யெச்சூரியின் அவதூறு பேச்சுக்கு மத்திய மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அர்ஜூன் சம்பத்

அரசியல்

பிரதமரின் நிர்பந்தம் – கொரோனா தடுப்பூசியான கோவேக்சின் மருந்து : சீதாராம் யெச்சூரியின் அவதூறு பேச்சுக்கு மத்திய மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அர்ஜூன் சம்பத்

பிரதமரின் நிர்பந்தம் – கொரோனா தடுப்பூசியான கோவேக்சின் மருந்து : சீதாராம் யெச்சூரியின் அவதூறு பேச்சுக்கு மத்திய மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அர்ஜூன் சம்பத்

கொரானா நோய்த்தடுப்பு கோவேக்சின் மருந்து தயாரிப்பதில் இந்திய மருத்துவ நிறுவனங்கள் பிரதமர் மோடியின் நிர்ப்பந்தம் காரணமாக அவசரம் காட்டக் கூடாது, என்று வெளிப்படையாகவே கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் தோழர் சீதாராம் யெச்சூரி கருத்து கூறியதற்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் அர்ஜுன் சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வெளியீட்டு உள்ள அறிக்கையில்:-  கொரானா நோய்த்தடுப்பு கோவேக்சின் மருந்து தயாரிப்பதில் இந்திய மருத்துவ நிறுவனங்கள் பிரதமர் மோடியின் நிர்ப்பந்தம் காரணமாக அவசரம் காட்டக் கூடாது, என்று வெளிப்படையாகவே கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் தோழர் சீதாராம் யெச்சூரி கருத்து தெரிவித்துள்ளார்.

பதஞ்சலி நிறுவனம் கொரானா நோயை குணமாக்கும் மருந்து, மாத்திரைகளை நமது பாரம்பரிய சித்த ஆயுர்வேத மருத்துவ முறையின்படி மூலிகைகளைக் கொண்டு கண்டுபிடித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களும், இந்திய மருந்தியல் துறை நிறுவனங்களும், இந்திய வைரஸ் ஆராய்ச்சி நிறுவனமும், பதஞ்சலி நிறுவனத்தின் மருந்துகளை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தி ஒப்புதல்கள் வழங்கியுள்ளன. பதஞ்சலி நிறுவனம் மருந்துகளை நோயாளிகளுக்குக் கொடுத்து சோதனை செய்து அதில் வெற்றி அடைந்துள்ளது. இன்னும் சில அங்கீகாரங்களுக்காகவும்,ஒப்புதல்களுக்காகவும் காத்திருக்கின்றது.

இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் பதஞ்சலி நிறுவனத்தின் மீது கொண்டிருக்கின்ற காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பதஞ்சலி மாத்திரைகள் குறித்து பல்வேறுவிதமான அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். பதஞ்சலி நிறுவனம் இந்து சமயம் சார்ந்த நிறுவனமாக இருக்கின்ற காரணத்தினால் கம்யூனிஸ்டுகளும், திராவிடர் கழகம் சார்ந்தவர்களும், இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்புகளும், கிருத்துவப் பின்னணி கொண்ட ஊடகங்களும், இத்தகைய அவதூறு பிரச்சாரத்தை முன்னெடுத்து நடத்தி வருகிறார்கள்.

சீனாவில் உற்பத்தியான கொரானா வைரஸ் மூலம் உலகம் முழுவதும் கொரானா நோய் பரவியதைத் தொடர்ந்து, பாரத நாட்டில் நமது மருத்துவத்துறை சார்ந்த மருத்துவ நிபுணர்களும், தீநுன்மி (வைரஸ்) ஆராய்ச்சியாளர்களும், கொரான நோயை குணப்படுத்த மருந்துகள் மற்றும் வேக்சின் தடுப்பூசிகள் தயாரிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள். கொரானா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கான மருத்துவ உபகரணங்கள், நோய் கண்டறியும் சாதனங்கள், நோயிலிருந்து காக்கும் கவச உடைகள், ஆகியவற்றை இந்தியத் தொழில் நுட்பத்தின் உதவியுடன் தயாரிப்பதிலும் நம் நாட்டில் முனைப்பு காட்டி வருகிறார்கள்.

இதற்காக இந்திய மருத்துவ துறையின் ஒப்புதல் மற்றும் சர்வதேச சுகாதார துறையின் ஒப்புதல் ஆகியவற்றை பெற்று நமது மருத்துவத் துறை சார்ந்த வல்லுனர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். சீன நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நோய் கண்டறியும் சோதனைக் கருவிகள் தரம் குறைந்ததாக இருந்த காரணத்தினால் திருப்பி அனுப்பப்பட்டது சீன நிறுவனங்கள் வணிக உள்நோக்கத்துடன் இது விஷயத்தில் செயல்படுவது நாம் அனைவரும் அறிந்ததே. சீன நாட்டின் ஏஜெண்டுகளாக வெளிப்படையாக செயல்படும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்திய மருத்துவர்களை அவ மதிக்கின்றனர் இந்திய மருத்துவ முறைகளை குறித்து அவதூறு பிரசாரம் செய்துவருகின்றனர்.

நோய்த்தடுப்பு மருந்தான கோவேக்சின் மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்வதை தடை மற்றும் தாமதம் செய்யும் உள்நோக்கத்தோடு கம்யூனிஸ்ட் கட்சியினர் செயல்பட்டு வருகிறார்கள். சீன மருத்துவ நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் இந்திய மருத்துவ நிறுவனங்களை அவமானப்படுத்தும் வகையிலும் கம்யூனிஸ்ட் கட்சியினர் செயல்பட்டு வருகிறார்கள் கோவேக்சின் மருந்து குறித்து அவதூறு பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

வருகின்ற ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கோவேக்சின் மருந்தை அறிமுகப்படுத்துவார்கள். மக்கள் பயன்பெற தொடங்கிவிடுவார்கள். நோயிலிருந்து பாரத நாடு விடுதலை பெறும் இந்த மருந்து சர்வதேச அளவில் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் கொரோனா அச்சத்திலிருந்து உலகம் விடுபடும். அதற்கு இந்திய மருத்துவத்துறை பெரும் பங்களிப்பைச் செய்யும் என்கிற நிலை தற்போது உள்ளது இதற்கான முயற்சிகளை இந்திய மருத்துவத் துறையினர் மற்றும் மத்திய அரசாங்கம் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இது பிடிக்கவில்லை. இவர்கள் சீன ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். கம்யூனிஸ்டுகளின் இத்தகைய பேச்சுக்களும், எழுத்துக்களும், தேச துரோகம் ஆகும். நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு எதிரானதாகும். எனவே சீதாராம் யெச்சூரி மீதும், கம்யூனிஸ்ட் கட்சியின் மீதும் மத்திய மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய விரோதமாக செயல்பட்டு வரும் கம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்ய வேண்டும். கொரானா நோயை குணமாக்கும் மருந்து கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் குறித்து அவதூறு பரப்பும் சீதாராம் எச்சூரி கைது செய்ய வேண்டும். இந்தக் கோரிக்கை புகார்  மனுவை இந்து மக்கள் கட்சி மத்திய மாநில அரசுகளுக்கு முன் வைக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Leave your comments here...