ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரிய மின் நிலையத்தை திறந்து வைத்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார் – பிரதமர் மோடி..!
- July 10, 2020
- jananesan
- : 1177
- Solar energy
நாட்டில் வரும் 2022ம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் கொண்ட கட்டமைப்பின் வழியே 175 ஜிகாவாட் மின்சாரம் பெறுவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக, மத்திய பிரதேசத்தின் ரேவா நகரில் 750 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய மின்திட்டம் ஒன்றை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.
மத்தியப் பிரதேசம் ரேவா மாவட்டத்தில் 1,500 ஹெக்டேரில் அமைக்கப்பட்டுள்ள 750 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்காக, சூரிய சக்தியை நாடெங்கிலும் விரைவாக, பரவலாகப் பயன்படுத்த கொள்கைத் திட்டங்களை வகுத்து, கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைத்து, திறன்கொண்ட மற்றும் திறன் அற்றவர்களுக்கான நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை அதிகரித்தல் ஆகியனவாகும்.மத்தியப் பிரதேசத்தின் உர்ஜா விகாஸ் நிகாம் லிமிடெட் மற்றும் மத்திய பொதுத் துறை நிறுவனமான சோலார் எனர்ஜி கார்பரேஷன் ஆப் இந்தியா ஆகியவை இணைந்து உருவாக்கிய கூட்டு நிறுவனமான ரேவா அல்ட்ரா மெகா சோலார் லிமிடெட் என்ற நிறுவனத்தால் இந்த சூரிய சக்தி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் எரிசக்தி பாதுகாப்புக்கு சூரிய மின்சக்தி அளிக்கக்கூடிய பங்கை உணர்ந்தும், சூரிய மின்சக்தி உபகரணமான போட்டோ ஒல்டிக்களின் விலை குறைந்துள்ளதாலும், சூரிய சக்தியை மின் கிரிட்டோடு இணைக்கும் சாத்தியம் முழுமையாக உள்ளதாலும், புதிய சூரிய மின்சக்தி அமைப்புகள் நாட்டில் வெகுவாக செயல்படுகிறது.நாட்டில் தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள், வீடுகள் மற்றும் கட்டிடங்களுக்கு வேண்டிய மின்சார தேவையை பூர்த்தி செய்வதற்கும், மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவற்றில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் கொண்ட கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இதனை இன்று பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார். ரேவாவில் உள்ள இந்த சூரிய மின்சக்தி திட்டம் மூலம், இங்குள்ள தொழிற்சாலைகளுக்கு மட்டும் அல்ல, டெல்லி மெட்ரோ ரயிலுக்கும் மின்சாரம் கிடைக்கும். ரேவா தவிர, ஷாஜாபூர், நீமச் மற்றும் சத்தர்பூர் ஆகிய இடங்களிலும், சூரிய மின்சக்தி திட்ட பணிகள் நடந்து வருகின்றன.
Inaugurating a Solar Project in Rewa, Madhya Pradesh. https://t.co/QXLmVlV5nb
— Narendra Modi (@narendramodi) July 10, 2020
பின்னர் காணொலி மூலம் பேசி பிரதமர் :- ‘ஒரே உலகம், ஒரே சூரியன், ஒரே மின்தொகுப்பு’ என்பதன் பின்னணியில் உள்ள கருத்து, இந்த உலகில் உள்ள சிறிய நாடுகளின் எரிசக்தி தேவைகளை நிறைவேற்றுவதுதான். இப்போது மட்டும் அல்ல, 21ம் நூற்றாண்டின் எரிசக்தி தேவைக்கும், சூரிய மின்சக்திதான் தீர்வாக இருக்கும். ஏனென்றால், சூரிய மின்சக்தி உறுதியானது, சுத்தமானது மற்றும் பாதுகாப்பானது என்றார்.
Leave your comments here...