ஆன்லைனில் முகக்கவசங்கள் விற்பனையைத் தொடங்கிய காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம்..!

இந்தியா

ஆன்லைனில் முகக்கவசங்கள் விற்பனையைத் தொடங்கிய காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம்..!

ஆன்லைனில் முகக்கவசங்கள்  விற்பனையைத் தொடங்கிய காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம்..!

காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் (கேவிஐசி) முகக்கவசங்களின் ஆன்லைன் விற்பனையைத் தொடங்கி உள்ளது

பரவலாக மிக பிரபலமான காதி முகக்கவசங்கள் தற்போது ஆன்லைனில் விற்பனைக்கு கிடைக்கின்றன. நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு, குறிப்பாக வீடுகளை விட்டு வெளியேறவோ அல்லது தடைகள் காரணமாக காதி இந்தியா விற்பனை நிலையங்களைப் பார்வையிடவோ முடியாதவர்களுக்கு ஆன்லைன் விற்பனை பயனளிக்கும் .காதி முகக்கவசங்களுக்கான ஆர்டர்களை பின்வரும் வலைத்தளத்தில் பதிவு செய்யலாம்: http://www.kviconline.gov.in/khadimask

காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் காதி பருத்தி மற்றும் பட்டு முகக்கவசங்கள் இரண்டையும் விற்பனை செய்கிறது. பருத்தி முகக்கவசம் ஒன்றின் விலை சிறிய தொகையாக ரூ. 30 ஆக நிர்ணைத்துள்ள பட்சத்தில் , பட்டு முகக்கவசம் ஒன்று ரூ.100 என்ற விலையில் கிடைக்கிறது. முகக்கவசங்களை ஆன்லைனில் வாங்குவதற்கு குறைந்தபட்ச ஆர்டர் ரூ.500 ஆகும். முகக்கவசங்களை வாங்குவோர் விற்பனைக்குக் கிடைக்கும். நான்கு வகையான முகக்கவசங்களில் இருந்து விரும்பியவாறு தேர்வு செய்யலாம்; அவை, கருப்புப் பட்டையுடன் கூடிய வெள்ளைப் பருத்தி முகக்கவசங்கள், மூவர்ணப் பட்டையுடன் கூடிய வெள்ளைப் பருத்தி முகக்கவசங்கள், திட வண்ணங்களுடன் கூடிய பட்டு முகக்கவசங்கள், மற்றும் பல வண்ணங்களில் அச்சிடப்பட்ட பட்டு முகக்கவசங்கள் ஆகும். வாங்கிய நாளில் இருந்து 5 நாட்களுக்குள் முகக்கவசங்களை காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் விநியோகக் கட்டணமின்றி அனுப்பி வைக்கிறது.. ஆன்லைன் விற்பனை தற்போது உள்நாட்டிற்கு மட்டுமே பொருந்தும்.

குறிப்பாக, காதி பருத்தி முகக்கவசங்கள், இரட்டையாக முறுக்கப்பட்ட 100 சதவிகிதப் பருத்தி துணியாலானது. இவ்வகை முகக்கவசங்கள் மூன்று மடிப்புகளைக் கொண்ட இரட்டை அடுக்குகளுடன், மூன்று அளவுகளில் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவில் கிடைக்கின்றன. இந்த முகக்கவசங்கள், இரண்டு வடிவங்களில் கிடைக்கின்றன –- கருப்புப் பட்டையுடன் கூடிய வெள்ளை முகக்கவசம் மற்றும் மூவர்ணப் பட்டையுடன் கூடிய வெள்ளை முகக்கவசம்.

எனினும், பட்டு முகக்கவசங்கள் 100 சகவிகித இரண்டு உள்ளடுக்குகளுடன், காதி பட்டு துணியின் மேல் அடுக்குடன் மூன்று அடுக்குகளாக உள்ளன. பட்டு முகக்கவசங்கள் அச்சிடப்பட்ட மற்றும் அச்சிடபடாத வடிவங்களில் பரந்த அளவிலான வண்ணங்களில் விருப்பத்திற்கு ஏற்றவாறு கிடைக்கின்றன. காதி பட்டு முகக்கவசங்கள் கவர்ச்சிகரமான மணிகள் கொண்ட சரிசெய்ய கூடிய காது சுழல்களுடன் தரமான அளவில் கிடைக்கின்றன.

Leave your comments here...