லடாக்கின் கல்வான் பகுதியில் இருந்து சீன ராணுவம் 2 கி.மீ தூரம் பின் வாங்கியது..!

இந்தியாஉலகம்

லடாக்கின் கல்வான் பகுதியில் இருந்து சீன ராணுவம் 2 கி.மீ தூரம் பின் வாங்கியது..!

லடாக்கின் கல்வான் பகுதியில் இருந்து சீன ராணுவம் 2 கி.மீ தூரம் பின் வாங்கியது..!

இந்தியாவின் லடாக்கின் கல்வான் பகுதியில் ஐந்து வாரங்களாக இந்திய – சீன படைகள் முகாமிட்டிருந்த நிலையில்,( ஜூன்15) மாலையில், திடீரென மோதல் ஏற்பட்டது. சீன ராணுவம் நடத்திய அட்டூழிய தாக்குதலில், நம் வீரர்கள், 20 பேர் வீரமரணம் அடைந்தனர். எல்லையில் உள்ள நிலையை மாற்றியமைக்க முயன்ற நம் ராணுவத்திற்கு பதிலடி கொடுத்தனர். இதில் 43 சீன வீரர்கள் உயிரிழந்தனர். இதனால், இரு நாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, நாடு முழுவதும், சீன பொருட்களை (Boycott China) புறக்கணியுங்கள் என மக்கள் மத்தியில் சீனாவுக்கு எதிரான கோபம் பல இடங்களில் வெளிப்படுத்தப்பட்டது இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி இந்தியாவில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் டிக்டாக், ஹலோ, ஷேர் இட் உள்பட சீனாவுடன் தொடர்புடைய 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், கடந்த 3ம் தேதி பிரதமர் மோடி, திடீரென லடாக் சென்று ஆய்வு செய்தார்

அமெரிக்க விமானப் படைக்கு சொந்தமான இரண்டு போர் விமானங்கள், தென் சீன கடல் பகுதிக்கு அதிரடியாக அனுப்பப்பட்டுள்ளன. அங்கு, இந்த விமானங்கள், அமெரிக்க கடற்படை கப்பல்களுடன் இணைந்து, போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.இதே பகுதியில், சீன கடற்படையினரும் அவ்வப்போது போர் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், அமெரிக்க படையினரின் இந்த பயிற்சி, சீனாவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் கல்வான் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. மேலும், ஆற்றில் பனி கட்டிகள் அதிகளவில் வருகின்றன. இந்த நதி கரையை ஒட்டியே, சீன படையினர் முகாமிட்டுள்ளனர். வெள்ளப்பெருக்கால் தாக்குப்பிடிக்க முடியாமல், சீன படையினர் திகைப்படைந்துள்ளனர். இதனால், சீன படையினர் வாபஸ் பெற்றாக வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. சரியான திட்டமிடல் இன்றி செய்த ஆக்கிரமிப்பு, நாட்டு ராணுவத்திற்கே சிக்கலாக மாறியுள்ளதாக, சீனாவில் சர்ச்சை எழுந்துள்ளது.இதுபற்றி மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், கல்வான் ஆற்றில் பனிக்கட்சிகள் வேகமாக உருகிக் கொண்டிருக்கின்றனஎந்த நேரத்தில் ஆற்றின் கரைகள் உடையும் அபாயம் ஏற்படும். இதனை செயற்கைக்கோள் மற்றும் ட்ரோன்கள் மூலம் கிடைத்த புகைப்படங்களின் மூலம் அறிந்து கொண்டோம் என்றார். அதேசமயம் தங்கள் வீரர்கள் எந்தவொரு சூழலுக்கும் தயாராக இருப்பதாகவும், அதற்கான ஏற்பாட்டை மேற்கொண்டு வருவதாகவும் சீன தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து ஒரு கி.மீ., தூரம் சீன படைகள் திரும்பி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், கல்வான் நதி வளைவில் இருந்து அவர்கள் திரும்ப துவங்கியுள்ளதாகவும், கட்டமைப்புகளை அகற்றியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பாக இந்திய ராணுவ வட்டாரங்கள் கூறுகையில், பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முடிவின்படி, சீன ராணுவம் 1 முதல 2 கி.மீ., தூரம் பின்வாங்கி சென்றுள்ளது. டென்ட்கள், வாகனங்களை எடுத்து சென்றுவிட்டனர். ஆனால், கனரக ஆயுதங்கள் கொண்ட வாகனம் தொடர்ந்து கல்வான் நதி பகுதியில் உள்ளது. அதனை இந்திய ராணுவம் கவனித்து வருகிறது.

Leave your comments here...