தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உலகளாவிய பந்தயத்தில் இந்திய உள்நாட்டு கொரோனா தடுப்பு மருந்துகள்..!
- July 6, 2020
- jananesan
- : 1142
- பாரத் பயோடெக்
இந்தியாவில் ஆகஸ்ட் 15 முதல் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
பாரத் பயோடெக் கோவாக்சின் (COVAXIN) மற்றும் ஜைடஸ் கேடிலாவின் ஜைகோவ்-டி (ZyCov-D) தடுப்பூசி அறிவித்ததும் கோவிட்-19 இன் இருண்ட மேகங்களிடையே அடிவானத்தில் வெள்ளி கம்பி என நம்பிக்கைக் கீற்றின் வெளிச்சம் கிடைத்துள்ளது. தடுப்பூசிகளுக்கான மனிதப் பரிசோதனையை நடத்துவதற்காக இப்போது இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் CDSCO (மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு) வழங்கிய ஒப்புதல், கொரொனா முடிவின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
கடந்த ஆண்டுகளில், இந்தியா குறிப்பிடத்தக்க தடுப்பூசி உற்பத்தி மையங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. யுனிசெஃப் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட தடுப்பூசி விநியோகத்தில் 60 சதவீதம் இந்திய உற்பத்தியாளர்கள். புதிதான இந்த கொரோனா வைரசிற்கான தடுப்பூசி உலகில் எங்கு வேண்டுமானாலும் உருவாக்கப்படலாம், ஆனால் இந்திய உற்பத்தியாளர்கள் இல்லாமல் தேவையான அளவு உற்பத்தி செய்வது சாத்தியமில்லை.
தடுப்பூசிப் பந்தயம்
140க்கும் மேற்பட்ட தடுப்பூசிகளின் தயாரிப்பு பல்வேறு கட்டங்களில் உள்ளன. முன்னணி தடுப்பூகளில் ஒன்றான AZD1222 ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஜென்னர் இன்ஸ்டிடியூட் உருவாக்கியதுடன், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜை தலைமையிடமாகக் கொண்ட அஸ்ட்ராஜெனெகா பிரிட்டிஷ்-ஸ்வீடிஷ் பன்னாட்டு மருந்து மற்றும் உயிர் மருந்துத் தயாரிப்பு நிறுவனம் உரிமம் பெற்றது. இதற்கு அடுத்தபடியாக, MRNA-1273 தடுப்பூசி, வாஷிங்டனின் கைசர் பெர்மனென்ட் வாஷிங்டன் சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியதுடன் அமெரிக்காவை தளமாகக் கொண்ட மாடர்னா மருந்து நிறுவனம் தயாரிப்பை மேற்கொண்டது. இந்த இரண்டு நிறுவனங்களும் ஏற்கனவே இந்திய உற்பத்தியாளர்களுடன் கோவிட் தடுப்பூசிகளைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தைச் செய்துள்ளன.
இணையாக இந்திய நிறுவனங்களும் இந்தியாவில் தடுப்பூசிகளை உருவாக்க ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D) குழுக்களும் ஈடுபட்டுள்ளன. புனேவைச் சேர்ந்த ICMR நிறுவனம் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி மற்றும் ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட CSIR நிறுவனமான செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் போன்ற நிறுவனங்களிலிருந்து வரும் முதன்மை அறிவியல் உள்ளீடுகள் மூலம், ஆறு இந்திய நிறுவனங்கள் கோவிட்-19க்கான தடுப்பூசி ஒன்றை உருவாக்கி வருகின்றன. இரண்டு இந்தியத் தடுப்பூசிகளான கோவாக்சின் மற்றும் ஜைகோவ்-டி ஆகியவற்றுடன் சேர்த்து உலகளவில் கண்டுபிடிக்கப்பட்ட 140 தடுப்பூசிகளில் 11 தடுப்பூசிகள் மனிதப் பரிசோதனைகளில் உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிகள் எதுவும் 2021 க்கு முன்னர் வெகுஜனப் பயன்பாட்டிற்குத் தயாராக இருக்க வாய்ப்பில்லை.
நோய் எதிர்ப்பு மண்டலம்
நோய்க்கிருமிகளின் தொற்று ஏற்படுவதால் உடலில் உருவாகும் ஆன்டிஜென், மனித நோயெதிர்ப்பு உயிரணுக்களால் உற்பத்தி செய்யப்படுவது. இணக்கமான ஜோடிக்கு இது பொருந்துவதாகக் கருதலாம். ஒவ்வொரு நோய்க்கிருமியும் ஆன்டிஜென் எனப்படும் குறிப்பிட்ட மூலக்கூறு கட்டமைப்பினைக் கொண்டுள்ளன. அவை ஒரு குறிப்பிட்ட மேற்பரப்பு சாயல் மற்றும் வடிவமைப்பைக் கொண்டவை. கிருமியால் பாதிக்கப்பட்டவுடன், மனித நோயெதிர்ப்பு மண்டலம் ஆன்டிஜெனுடன் பொருந்தக்கூடிய ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது.
சில்லறை விற்பனையாளர் வடிவமைப்பு பொருந்தக்கூடிய பொருள்களின் வண்ணங்கள் மற்றும் சாயல்களின் கலவைகளின் நூற்றுக்கணக்கான வடிவமைப்புத் துண்டுகளை சேமித்து வைப்பது போல, நமது நோயெதிர்ப்பு மண்டலத்தில் பத்தாயிரம் வகையான ஆன்டிபாடிகள் உள்ளன. நோய்க்கிருமி அறியப்பட்ட எதிரி என்றால், நோயெதிர்ப்பு மண்டலம் பொருந்தக்கூடிய வடிவமைப்பு பகுதியை சேமிப்புகளிலிருந்து எடுத்து கொள்ளமுடியும். அடையாளம் காணபட்டவுடன் நோய்க்கிருமி செயலிழக்க வைக்கப்படுகிறது. மீண்டும் அது தொற்றாது.
இருப்பினும், நுண்ணுயிரிகள் அறிமுகமில்லாததாக இருந்தால், முக்கியமாக அது முதன்முறையாக உருவாகும் போது, அதற்கு பொருந்தக்கூடிய வண்ணமும் சாயலும் உடைய ஆண்டிஜென் இருப்பதில்லை. ஆயினும் கூட வேறு சில ஆன்டிபாடி உருவாகலாம். முதலில், அருகிலுள்ள பொருந்தக்கூடிய ஆன்டிஜென்கள் முயற்சிக்கப்படுகின்றன. ஆன்டிபாடி வளர்ச்சியின் பல்வேறு சுழற்சிகளுக்குப் பிறகு, சிறந்த பொருத்தம் ஏற்றுக்கொள்ளபடுகிறது. ஆன்டிஜெனாக இருக்கும் முக்கிய மேற்பரப்பு நிறத்தை அடையாளம் காண்பதற்கும், ஆன்டிபாடிகள் என்று இணைக்கும் வடிவமைப்புத் துண்டைக் கண்டுபிடிப்பதற்கும் இடையிலான நேரம் தாமதமாகும், இது தொற்றுநோயை லேசானதாகவோ அல்லது கடுமையாகவோ ஆக்குகிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தால் மட்டுமே கிருமியை உடனடியாக செயலிழக்க வைக்க முடியும் என்பதால், தொற்றுநோயைத் தடுக்க முடியும்.
நோயெதிர்ப்பு மண்டல நினைவகம் மற்றும் தடுப்பூசி
ஒருமுறை பெற்ற வடிவமைப்பு துண்டுகளின் புதிய சாயல் எதிர்காலத்திற்காக சேமிக்கப்படும், ஆன்டிஜெனுடன் பொருந்தக்கூடிய புதிய ஆன்டிபாடி உருவாகியவுடன், அது நோயெதிர்ப்பு நினைவகத்தில் தக்கவைக்கப்படுகிறது. அடுத்த முறை அதே நோய்க்கிருமி படையெடுக்கும் போது, நோயெதிர்ப்பு நினைவகம் செயல்படுத்தப்படுவதுடன் இரட்டை ஆன்டிபாடி வெளியிடப்படுகிறது. நோய்த்தொற்று ஆரம்ப நிலையில் கண்டறியபடுகிறது. இதனால் நாம் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுகிறோம்.
தடுப்பூசி என்பது நோயெதிர்ப்பு நினைவகத்தை செயற்கையாகத் தூண்டும் ஒரு முறையாகும். மோசமான நோய்க்கிருமியின் ஆன்டிஜென்கள் அறிமுகப்படுத்தப்பட்டவுடன், நோயெதிர்ப்பு மண்டலம் ஜோடி ஆன்டிபாடிகள் மற்றும் நோயெதிர்ப்பு நினைவகத்தை உருவாக்குவதற்குத் தூண்டப்படுகிறது.
ஆன்டிபாடிகள் மற்றும் நினைவகத்தை உருவாக்க ஒருவரின் நோயெதிர்ப்பு மண்டலத்தை செயற்கையாகத் தூண்ட பல வழிகள் உள்ளன. இப்படித் தான் புதிய கொரோனா வைரஸின் ஆன்டிஜென்களை மனித நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு முன்வைக்கப்படுகிறது. அடினோவைரஸ் அடிப்படையிலான லைவ்-அட்டென்யூட்டட் வைரஸ் முதல் மறுசீரமைப்பு மரபணுத் தொழில்நுட்பம் வரை பல வகையான தடுப்பூசிகளை உருவாக்கப் பயன்படுகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு சாத்தியக்கூறுகளில் இரண்டு, வைரஸை செயலற்றதாக்கும் தடுப்பூசி மற்றும் DNA பிளாஸ்மிட் தடுப்பூசி ஆகும்.
இந்த தடுப்பூத்சிகள் எவ்வாறு செயல்படுகின்றன
வெப்பம் அல்லது ஃபார்மால்டிஹைட் (அது ‘கொல்லப்பட்டது’) மூலம் முழு வைரசையும் செயலிழக்கச் செய்யலாம், ஆனாலும் ஆன்டிஜென் மூலக்கூறு கட்டமைப்புகளை அப்படியே வைத்திருக்க முடியும். இருப்பினும், செயலற்ற வைரஸ் நோயால் பாதிக்கவோ அல்லது நோயை ஏற்படுத்தவோ முடியாது, ஏனெனில் அது இனி செயல்படாது. வைரஸை செயலற்றதாக்கும் தடுப்பூசியை உருவாக்க பாரத் பயோடெக்கின் கோவாக்சின் ஒரு இந்திய நோயாளியிடமிருந்து எடுக்கப்பட்ட வைரஸை தேசிய வைராலஜி நிறுவனம் பயன்படுத்துகிறது.
புதிய கொரோனா வைரஸ் அதன் ஸ்பைக் புரதங்களின் உதவியுடன் மனித உயிரணுக்களை பாதிக்கிறது. வைரஸின் ஸ்பைக் புரதம் மனித சுவாசக் குழாய் உயிரணுக்களின் மேற்பரப்பில் உள்ள ACE2 ஏற்பிகளுடன் பிணைத்துக் கொள்கிறது. வைரஸ் தொற்றியவுடன், வைரஸ் மரபணு மனித உயிரணுக்களில் நுழைந்து, வைரசின் ஆயிரம் பிரதிகள் வெறும் பத்து மணி நேரத்தில் உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு உருவான வைரஸ்கள் அருகிலுள்ள அணுக்களுக்கு குடியேறுகின்றன. புதிய கொரோனா வைரசின் ஸ்பைக் புரதத்தைச் செயலிழக்கச் செய்தால் மட்டுமே தொற்றுநோய்ப் பரவலைத் தடுக்க முடியும். இதனால் ஸ்பைக் புரதத்தில் உள்ள ஆன்டிஜென், தடுப்பூசிக்கு ஒரு முக்கியமான இலக்காகும். ஆன்டிபாடி ஸ்பைக் புரதத்தைத் தடுத்தால், வைரசால் அணுக்களில் நுழைந்து பல்கி பெருக முடியாது.
ஸ்பைக் புரதத்தின் மரபணுக் குறியீடு பாதிப்பில்லாத டி.என்.ஏ பிளாஸ்மிட்டாக பிரிக்கப்படுகிறது. வைரஸ் ஸ்பைக் புரதத்தின் மரபணுக் குறியீட்டைக் கொண்ட இந்த மாற்றியமைக்கப்பட்ட பிளாஸ்மிட் டி.என்.ஏ பெருந்திரளான அணுக்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது. செல்லுலார் இயந்திரங்கள் டி.என்.ஏவை பரிமாற்றம் செய்து மரபணுவில் குறியிடப்பட்ட வைரஸ் புரதத்தை உருவாக்குகின்றன. மனித நோயெதிர்ப்பு மண்டலத்தை அந்நிய புரதத்தை அங்கீகரிப்பதுடன், பொருந்தக்கூடிய ஆன்டிபாடியை உருவாக்குகிறது. இந்தத் தடுப்பூசிக்குப் பிறகு, எந்த நேரத்தில், புதிய கொரோனா வைரஸ் நாம் பாதிக்கப்பட்டாலும், ஸ்பைக் புரதத்தை உணர்ந்தவுடன், நமது நோயெதிர்ப்பு மண்டலத்தால் உடனடியாக ஆண்டிஜென் வெளியிடப்படுகிறது. நோயெதிர்ப்புக் கொலையாளி செல்கள் செயலிழந்த வைரஸ்களைக் கைப்பற்றுகின்றன. தொற்று ஏற்படுவதற்கு முன்பே தொற்று பரவாமல் தடுக்கப்படுகிறது.
Leave your comments here...