காவல்பணியில் ஈடுபட பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு தடை – மாவட்டங்களில் நடவடிக்கை…!

தமிழகம்

காவல்பணியில் ஈடுபட பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு தடை – மாவட்டங்களில் நடவடிக்கை…!

காவல்பணியில் ஈடுபட பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு தடை  – மாவட்டங்களில் நடவடிக்கை…!

சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் தொடர்புடைய இன்ஸ்பெக்டர், எஸ் ஐ உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் சில பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களையும் கைது செய்து தீவிர விசாரணை செய்து தகுந்த தண்டனை அளிக்க வேண்டும் என்ற குரல் வலுவடைந்துள்ளது.

இந்நிலையில் தமிழக டிஜிபி அறிவுறுத்தலின் படி திருச்சி சரகத்தில் தற்காலிக தடை விதித்து டிஜஜி ஆனி விஜயா உத்தரவு பிறப்பித்தது உள்ளார்.திருச்சி, அரியலூர், கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு டிஜஜி ஆனி விஜயா தடை விதித்துள்ளார்.

மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் காவல் பணியில் ஈடுபட பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட எஸ்பி ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியுள்ளார்கள். சமூகப் பணிகளுக்கு மட்டுமே பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் பயன்படுத்தபடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் காவலர்களுக்கு இன்று முதல் 10 நாட்கள் தற்காலிக விடுப்பு.

தூத்துக்குடி மாவட்டத்திலும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் காவல்பணியில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது

ராமநாதபுரம் மாவட்டத்திலும் பிரெண்ட்ல் ஆஃப் போலீஸ் காவல் பணியில் ஈடுபட தடை விதிப்பு – எஸ்.பி, வருண்குமார்

சாத்தான்குளம் தந்தை,மகன் விவகாரத்தில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் சிக்கியதையடுத்து நடவடிக்கை

Leave your comments here...