சீனா மோதலில் காயமடைந்த இராணுவ வீரர்களை மோடி சென்று நலம் விசாரித்த மருத்துவமனை : இராணுவம் விளக்கம்..!!

இந்தியா

சீனா மோதலில் காயமடைந்த இராணுவ வீரர்களை மோடி சென்று நலம் விசாரித்த மருத்துவமனை : இராணுவம் விளக்கம்..!!

சீனா மோதலில் காயமடைந்த இராணுவ வீரர்களை  மோடி சென்று  நலம் விசாரித்த மருத்துவமனை  : இராணுவம்  விளக்கம்..!!

லடாக்கில் உள்ள இந்திய ராணுவ தளத்திற்கு பிரதமர் மோடி நேற்று ஒருநாள் சுற்றுப்பயணமாக சென்றார். அங்கு, சீன ராணுவ வீரர்களுடன் நடந்த மோதலில் காயம் அடைந்த இந்திய வீரர்களை சந்தித்து, பிரதமர் மோடி நலம் விசாரித்தார்

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 03, 2020 அன்று லேவில் உள்ள பொது மருத்துவமனைக்கு விஜயம் செய்த போது பார்வையிட்ட மருத்துவமனை வசதியின் நிலை குறித்து சில பகுதிகளில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.நமது துணிச்சலான ஆயுதப்படைகள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்பதில் அபிப்ராய பேதங்கள் முன்வைக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது. ஆயுதப்படைகள் தங்கள் பணியாளர்களுக்கு சிறந்த சிகிச்சையை அளிக்கின்றன.

இந்த 100 படுக்கைகளுடன் உள்ள மருத்துவ வசதி, நெருக்கடி காலத்தில் விரிவாக்கப்பட்டதில் ஒரு பகுதியாகும், இது பொது மருத்துவமனை வளாகத்தின் ஒரு பகுதியாகும் என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கோவிட்-19 நெறிமுறைகளின் படி பொது மருத்துவமனையின் சில வார்டுகளைத் தனிமைப்படுத்தும் வசதிகளுடையதாக மாற்ற வேண்டும்.

எனவே, பொதுவான பயிற்சி ஆடியோ வீடியோ ஹால் ஆகப் பயன்படுத்தப்பட்ட அரங்கம், ஒரு வார்டாக மாற்றப்பட்டது, ஏனெனில் இந்த மருத்துவமனை கோவிட் சிகிச்சைக்கான மருத்துவமனையாகவும் செயல்பட்டது.கோவிட் பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக கால்வானில் இருந்து வந்ததிலிருந்து காயமடைந்த வீர்ர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். தலைமை இராணுவத் தளபதி ஜெனரல் எம். எம். நாரவனே மற்றும் ராணுவத் தளபதியும் அதே இடத்தில் காயமடைந்த வீர்ர்களை பார்வையிட்டனர்.

Leave your comments here...