கல்வான் பகுதியில் நடந்த மோதலில் காயமடைந்த வீரர்களை சந்தித்து ஆறுதல் கூறினார் பிரதமர் மோடி..!

இந்தியா

கல்வான் பகுதியில் நடந்த மோதலில் காயமடைந்த வீரர்களை சந்தித்து ஆறுதல் கூறினார் பிரதமர் மோடி..!

கல்வான் பகுதியில் நடந்த மோதலில் காயமடைந்த வீரர்களை சந்தித்து ஆறுதல் கூறினார் பிரதமர் மோடி..!

இந்தியாவின் லடாக்கின் கல்வான் பகுதியில் ஐந்து வாரங்களாக இந்திய – சீன படைகள் முகாமிட்டிருந்த நிலையில்,( ஜூன்15) மாலையில், திடீரென மோதல் ஏற்பட்டது. சீன ராணுவம் நடத்திய அட்டூழிய தாக்குதலில், நம் வீரர்கள், 20 பேர் வீரமரணம் அடைந்தனர். எல்லையில் உள்ள நிலையை மாற்றியமைக்க முயன்ற நம் ராணுவத்திற்கு பதிலடி கொடுத்தனர். இதில் 43 சீன வீரர்கள் உயிரிழந்தனர். இதனால், இரு நாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், காயமடைந்த வீரர்களை இன்று நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்தார். பாதுகாப்புத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் ராணுவத் தலைவர் எம்.எம்.நரவனே ஆகியோர் பிரதமர் மோடியுடன் இருந்தனர்.


பின்னர் பேசிய பிரதமர் மோடி:
அந்நிய சக்திகளிடம் இந்தியா ஒருபோதும் தலைகுனியாது. அனைவரும் விரைவில் நலம்பெற விரும்புகிறேன் என்று தெரிவித்தார். இந்திய வீரர்களின் தைரியத்தை உலகமே உற்று நோக்குவதாகவும் ராணுவ வீரர்கள் சிந்திய ரத்தம் இளைஞர்களுக்கு உந்துசக்தியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.உலகின் மிகக் கடினமான சூழலில் உங்களின் முழு உழைப்பையும் கொடுத்து வருகிறீர்கள். இதன் மூலம் நீங்கள் திரும்ப திரும்ப, இந்திய ராணுவம்தான் உலகிலேயே மிகச் சிறந்தது என்பதை நிரூபித்து வருகிறீர்கள்.


இங்கிருந்து நீங்கள் அனுப்பிய தகவல் உலகையே அடைந்துள்ளது. அது மிக உறுதியாக இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு இந்தியனும், உலகின் பல்வேறு இடங்களில் இருக்கும் இந்தியர்களும், நீங்கள் நாட்டை பலமானதாகவும் பாதுகாப்பானதாகவும் வைத்திருப்பீர்கள் என்று நம்பிக்கைக் கொண்டுள்ளார்கள்.


தன் தாய் நாட்டிற்காக உயிர் நீத்த அனைத்து வீரர்களுக்கும், உங்களுக்கும் நான் தலை வணங்குகிறேன். லடாக்கில் இருக்கும் ஒவ்வொரு மூலைக்கும், ஒவ்வொரு கல்லுக்கும், ஒவ்வொரு நதிக்கும், அது இந்தியாவைச் சேர்ந்தது என்பது தெரியும்.’ என்று பேசினார்.

Leave your comments here...