இந்தியாவில் சிறு குறு நிறுவனங்களுக்கு உதவும் வகையில் ரூ 5,625 கோடி வழங்க உலக வங்கி ஒப்புதல் ..!

இந்தியா

இந்தியாவில் சிறு குறு நிறுவனங்களுக்கு உதவும் வகையில் ரூ 5,625 கோடி வழங்க உலக வங்கி ஒப்புதல் ..!

இந்தியாவில்  சிறு குறு நிறுவனங்களுக்கு உதவும் வகையில் ரூ 5,625 கோடி வழங்க உலக வங்கி ஒப்புதல் ..!

கொரோனா பரவலால் இந்தியாவில் பொது முடக்கம் கடைப்பிடிக்கப்பட்டு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிப்பு அடைந்தன. இதையடுத்து அந்த நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிக்கும் விதமாகவும் , லட்சகணக்கான மக்கள் வேலை வாய்ப்பினை பெறும் விதத்திலும் உலக வங்கி இந்த நிதி உதவியை வழங்கி உள்ளது.

இது குறித்து உலக வங்கி இயக்குனர் ஜனாய் அகமது பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது, ‘இந்தியாவின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் சிறு குறு நிறுவனங்கள் முக்கிய காரணியாக இருப்பதாகவும் இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் அவை முக்கிய பங்கு வகிக்கும்’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் முதல் இன்றைய தேதி வரை கொரோனா பாதப்பிற்காக இந்தியாவிற்கு 20,625 கோடி ரூபாய் வழங்குவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

Leave your comments here...