அரசு பங்களாவை உடனடியாக காலி செய்யுங்கள் – பிரியங்கா காந்திக்கு மத்திய வீட்டுவசதி வாரியம் நோட்டீஸ்

அரசியல்

அரசு பங்களாவை உடனடியாக காலி செய்யுங்கள் – பிரியங்கா காந்திக்கு மத்திய வீட்டுவசதி வாரியம் நோட்டீஸ்

அரசு பங்களாவை உடனடியாக காலி செய்யுங்கள் – பிரியங்கா காந்திக்கு மத்திய வீட்டுவசதி வாரியம் நோட்டீஸ்

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாவின் மகளும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரியங்கா காந்திக்கு கடந்த 1997-ம் ஆண்டு பாதுகாப்பு காரணத்திற்காக டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள 35ஆவது நம்பர் பங்களாவை அரசு ஒதுக்கியிருந்தது.

இந்த நிலையில், வருகிற ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதிக்குள் பிரியங்கா காந்தியின் லோதி எஸ்டேட் பங்களாவை காலி செய்யுமாறு வீட்டுவசதி வாரிய மற்றும் நகர விவகார அமைச்சகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அந்த நோட்டீஸில், பிரியங்கா காந்திக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி. பாதுகாப்பை உள்துறை அமைச்சகம் விலக்கி கொண்டுள்ளது. சிறப்பு பாதுகாப்பு குழுவின் பாதுகாப்பு இல்லாத நபர்களுக்கு இந்த இடத்தில் வீடு வழங்க இயலாது என குறிப்பிடப்பட்டுள்ளது.இதன் காரணமாக தங்களுக்கு அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட வீட்டிற்கான சலுகை ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ள அந்த நோட்டீஸில், குறிப்பிட்ட காலத்துக்குள் வீட்டை காலி செய்யவில்லை என்றால் விதிமுறைப்படி சேதாரம் அல்லது அபராத வசூல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்ச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...