கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில், நாம் ஒன்று சேர்ந்து வாழ்வாதாரத்தையும் பாதுகாப்போம் – குடியரசு துணைத் தலைவர்

இந்தியா

கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில், நாம் ஒன்று சேர்ந்து வாழ்வாதாரத்தையும் பாதுகாப்போம் – குடியரசு துணைத் தலைவர்

கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில், நாம் ஒன்று சேர்ந்து வாழ்வாதாரத்தையும் பாதுகாப்போம் –  குடியரசு துணைத் தலைவர்

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க முன்வர வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து குடியரசு துணைத்தலைவர் முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில் :- பெரும்பாலான நாடுகள் பொது முடக்கத்துக்கு முடிவு கட்டி, பொருளாதார நடவடிக்கைளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளதாகக் கூறியுள்ளார். பொருளாதாரத்துக்கு ஊக்கம் கொடுக்க அரசு தொடர் முயற்சிகளை எடுத்து வருவதாகக் கூறியுள்ள அவர், ஒவ்வொருவரும், விதிமுறைகளைப் பின்பற்றி, தேவையான தடுப்பு முயற்சிகளை எடுத்து, அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னெப்போதும் கண்டிராத இந்தச் சுகாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உரிய போராட்டத்தில் மக்கள் ஒற்றுமையாகப் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள திரு. நாயுடு, ஆன்மீகம் மற்றும், அறிவியல் மீதான நமது நம்பிக்கையில் தான் நம் நாட்டின் வலிமை அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.மக்கள் இந்த நிலையில், பீதியடையாமல், முன்தடுப்பு மற்றும் பாதுகாப்பு முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

ஆன்மீக குரு ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர் கூறியதை எடுத்துக்காட்டியுள்ள, குடியரசு துணைத்தலைவர், நமது உண்மையான வாழ்க்கைப் பங்காளி நம் உடல் தான் என்று கூறியுள்ளார். எனவே, சரியான உணவு வகைகளை உண்பதன் மூலமும், உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கான, உடற்பயிற்சிகளைச் செய்வதன் மூலமும் நம் உடல் மீது நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அப்போதுதான், நம் உடல், நோய்களுக்கு எதிரான போராட்டத்தில் நமக்கு ஒத்துழைப்பு தரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

‘இப்போதைய கட்டுப்பாடுகள், முடக்கப்பட்ட வாழ்க்கை முறை எப்போது முடிவுக்கு வரும்?, நமது இயல்பான வாழ்க்கைக்கு எப்போது நாம் திரும்புவோம்?’ என்பது போன்ற கேள்விகளுக்கு உறுதியான பதிலை அளிப்பது எளிதான விஷயமாக இருக்காது என்று கூறியுள்ள குடியரசு துணைத்தலைவர், பெருந்தொற்று எப்போது முடிவுக்கு வரும் என்பது தெரியாத நிச்சயமற்ற நிலை, அதன் காரணமாக ஏற்பட்டுள்ள அழுத்தம் ஆகியவற்றுக்கு இடையே, நாம் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். பெருநகரங்களில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது பற்றி குறிப்பிட்டுள்ள குடியரசு துணைத்தலைவர், பாதிக்கப்பட்ட பெரும்பாலோனார் அதை வெற்றி கண்டு குணமடைந்துள்ளதைச் சுட்டிக்காட்டி, பாதிக்கப்பட்டவர்களில், குறைந்த சதவீதம் பேருக்கே மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது என்ற நம்பிக்கை உணர்வையும் வெளியிட்டுள்ளார்.

Leave your comments here...