பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும்.! தமிழக அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் விஎம்எஸ்.முஸ்தபா கோரிக்கை…!!
- September 10, 2019
- : 1361

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம், 1983 ம் ஆண்டு எம். ஜி.ஆர் தலைமையிலான
அதிமுக அரசாங்கத்தால், தமிழகத்தில் மதுவகைகளின் மொத்த விற்பனைக்காக தொடங்கப்பட்டது. தனியார் நடத்தி வந்த மதுபானக் கடைகளை அரசே ஏற்று நடத்தும் வகையில் 2003-ம் ஆண்டு தமிழக அரசால் டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட்டது.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் 5-ந்து நிர்வாக மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் ஆகிய இந்து மண்டலங்களும் மண்டல மேலாளர்களின் தலைமையில் நிர்வகிக்கபடுகின்றன. இவை மேலும் 33 வருவாய் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டமும் ஒரு மாவட்ட மேலாளர் கீழ் இயங்குகின்றது 2010 ஆம் ஆண்டு வாக்கில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்திற்கு தமிழகமெங்கும் 600 மதுக்கடைகளும், 41 சேமிப்புக் கிடங்குகள் இருந்தன. இந்நிறுவனத்தின் மொத்தம் 36,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
தமிழ்நாட்டில் 5,198 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இதன் மூலம் தமிழக அரசுக்கு அதிக வருமானம் கிடைத்து வருகிறது. சாதாரண நாட்களில் தினமும் 70கோடி கிடைக்கிறது. பண்டிகை நாட்களில் ரூ.100 கோடி வரை வருமானம் வருகிறது. டாஸ்மாக் மது விற்பனை வாயிலாக, 2018 – 19 ம் நிதியாண்டில், தமிழக அரசுக்கு, 31 ஆயிரத்து, 158 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது, முந்தைய ஆண்டை விட, 4360 கோடி ரூபாய் அதிகமாகும். இளைஞர்கள் மற்றும் மாணவர் சமுதாயமும் டாஸ்மாக் கடைகளை நோக்கி படையெடுக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மது என்னும் அரக்கனிடமிருந்து இளைஞர், மாணவர் சமுதாயத்தை காக்க, வேண்டுமென்றால், தமிழகத்தில் பூரண 83 மதுவிலக்கை கொண்டு வர போர்க்கால அடிப்படையில் அரசு நடிவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும். டாஸ்மாக்கில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மாற்று பணி வழங்கி, அந்த பணியாளர்களுக்கு பணி உத்தரவத்தையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக அரசு, டாஸ்மாக் கடைகளுக்கு மூடு விழா நடத்த வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
…நமது நிருபர்
பாண்டியன்