சாத்தான்குளம் கொடூரம்- குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஹெச்.ராஜா

அரசியல்தமிழகம்

சாத்தான்குளம் கொடூரம்- குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஹெச்.ராஜா

சாத்தான்குளம் கொடூரம்- குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்  – ஹெச்.ராஜா

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரை கடந்த 19ஆம் தேதி இரவு 8 மணி அளவில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடையை திறந்து இருப்பதாக கூறி விசாரணைக்கு அழைத்து சென்ற தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்துறையினர், அவர்கள் இருவரையும் விசாரணை என்ற பெயரில் அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

அதன்பின்னர் அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து மறுநாள் காலையில் கோவில்பட்டி கிளை சிறையில் போலீசார் அடைத்த நிலையில், பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம்தொடர்பாக இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், 2 தலைமைக் காவலர்கள் மீது அலுவல் ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தை, மகன் மரணம் தொடர்பாக தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு உயிரிழந்த தந்தை – மகன் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம், அரசு வேலை வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்தார் உள்ளார்.


இது குறித்து அவர் கூறுகையில்: சாத்தான்குளத்தில் போலீஸ் கஸ்டடியில் நடந்த இறப்பு ( custodial death) வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு உடனடியாக 4 காவலரையும் சஸ்பென்ட் செய்துள்ளது. இதற்கான மேஜிஸ்திரேட் நீதி விசாரணை நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் ஒரு காவல் நிலையத்தில் 4 பேர் செய்த குற்றத்திற்கு காவல்துறை முழுவதையும் கண்டனத்திற்கு உள்ளாக்குவது முறையல்ல. சீனக் கொரோனாவிற்கு எதிரான யுத்தத்தில் காவல்துறை அரும் பணியாற்றி வருகிறது. இந்த நேரத்தில் காவல்துறைக்கு எதிரான எந்தவித போராட்டமும் வெகுஜன விரோத போராட்டமாகவே கருதப்படும். காவலர் வில்சன் படுகொலையை கண்டித்து போராடாது வர்த்தக சங்கங்கள் இன்று போராடுவது ஏன்? இந்த வர்த்தக சங்கங்களை இயக்கும் தீய சக்திகள் எவை என்பது குறித்து உளவுத்துறை எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும்.

இச்சம்பவத்தை அமெரிக்க ப்ளாயிட் சம்பவத்துடன் ஒப்பிட்டு சிலர் பேசுவது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
தேசவிரோத சீனக் கூலிகள் சீனாவின் செம்புக்கு இங்கு மார்க்கெட் உருவாக்க ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சர்ச்சில் மணியடித்து கலவரம் செய்ததை மறந்துவிடக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்த கொடூரமான சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நீதி விசாரணையின் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித இரு கருத்துக்கும் இடமில்லை. ஆனால் இதை வாய்ப்பாகப் பயன் படுத்தி நாட்டை சில தீய சக்திகள் கலவர பூமியாக மாற்றுவதை அனுமதிக்க முடியாது.
தொடர்ந்து இதுபற்றி பேசுவோம். 

Leave your comments here...