புகழ்பெற்ற பூரி ஜெகன்நாதர் ஆலயத்தின் ரத யாத்திரைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி..!

ஆன்மிகம்இந்தியா

புகழ்பெற்ற பூரி ஜெகன்நாதர் ஆலயத்தின் ரத யாத்திரைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி..!

புகழ்பெற்ற பூரி ஜெகன்நாதர் ஆலயத்தின் ரத யாத்திரைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி..!

ஒடிசா மாநிலத்தின் கடற்கரையோர நகரான புரியில் அமைந்துள்ள ஜெகன்னாதர் கோவிலில் ரத யாத்திரை திருவிழா ஆண்டுதோறும் 9 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.ஜெகன்னாதர் ஆலயத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கண்டிச்சா ஆலயம் வரை தேரோட்டம் நடைப்பெறும் இதில், பங்கேற்பதற்காக நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் . அவர்கள்” மேளதாளங்களுடன் “ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா”…. “ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே என்ற பக்தி கோஷங்கள் எழுப்பியபடி கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள்.

இந்த ஆண்டின் ரத யாத்திரை வருகிற 23-ந்தேதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் இந்த விழாவை கொரோனா தொற்று காரணமாக கடும் கட்டுப்பாடுகளுடன் நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது.இதையடுத்து தேரோட்டத்தை தள்ளி வைக்குமாறு ஒடிசா விகாஸ் பரிசத் என்ற பொது நல அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள்:- ரத யாத்திரைக்கு நாங்கள் அனுமதி அளித்தால், கடவுள் ஜெகன்நாதரே எங்களை மன்னிக்க மாட்டார். தொற்று நோய் பரவல் சமயத்தில் இதுபோன்ற கூட்டங்கள் நடக்க அனுமதிக்க முடியாது. மோசமான தொற்றுநோயான கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்பதால், சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். நெரிசலான சூழலில் ஆபத்து பன்மடங்கு அதிகரிக்கும்.மக்களின் நலன் கருதி இந்த ரத யாத்திரைக்கு தடை விதிக்கப்படுகிறது” என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நீதிபதிகளின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பூரி ஜெகன்நாதர் ஆலயத்தின் சங்கராச்சாரியர் சுவாமி நிஸ்சாலந்த சரஸ்வதி, ஆலயத்தின் ரத யாத்திரையை நடத்துவதற்கான பாதுகாப்பு திட்டங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து இந்த வழக்கு இன்று நீதிபதி ரவீந்திர பட் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, ரத யாத்திரைக்கு பொதுமக்கள் பங்களிப்பு இல்லாமல் அனுமதி அளிக்குமாறு மத்திய அரசு வாதிட்டது.“கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் பங்களிப்பு இல்லாமல் இந்த ஆண்டு பூரி பகவான் ஜெகன்நாத் ரத யாத்திரை நடத்த அனுமதிக்கலாம். பல நூற்றாண்டுகளின் பாரம்பரியம் நிறுத்தப்படக்கூடாது. இது கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கைக்குரிய விஷயம். பகவான் ஜெகன்நாதர் நாளை வெளியே வராவிட்டால், அவர் பாரம்பரியங்களின்படி 12 ஆண்டுகள் வெளியே வர முடியாது” என்று மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கோர்ட்டில் வாதாடினார்.

இதனையடுத்து ஓடிசா மாநிலம், பூரி ஜெகநாதர் ஆலய தேரோட்டத்திற்கு அனுமதியளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 12 நாட்கள் நடைபெறும் பூரி ஜெகநாதர் ஆலய தேரோட்டத்தில் 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், எத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட முழு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...