காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்- இந்திய வீரர் உயிரிழப்பு

இந்தியாஉலகம்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்- இந்திய வீரர் உயிரிழப்பு

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி  தாக்குதல்- இந்திய வீரர் உயிரிழப்பு

பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைப் பகுதிகளை குறிவைத்து அவ்வப்போது அத்துமீறி தாக்குதல் நடத்துகிறது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில் காஷ்மீரின் நவ்ஷெரா மற்றும் கிருஷ்ணா காடியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவ நிலைகள் மீது திடீரென அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனையடுத்து பாகிஸ்தான் ராணுவத்தினரின் தாக்குதலுக்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர்.

ஆனால் இந்த சண்டையில் இந்திய வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இம்மாதத்தில் மட்டும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதல்களில் இந்திய வீரர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த ஆண்டில் இதுவரை 1400க்கும் மேற்பட்ட முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது.

Leave your comments here...