இந்தியா சீனா எல்லை பதற்றம் : 3 நாள் பயணமாக ரஷ்யா செல்கிறார் ராஜ்நாத்சிங் – என்னவாக இருக்கும்..?

இந்தியாஉலகம்

இந்தியா சீனா எல்லை பதற்றம் : 3 நாள் பயணமாக ரஷ்யா செல்கிறார் ராஜ்நாத்சிங் – என்னவாக இருக்கும்..?

இந்தியா சீனா எல்லை பதற்றம் : 3 நாள் பயணமாக ரஷ்யா செல்கிறார் ராஜ்நாத்சிங் – என்னவாக இருக்கும்..?

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 3 நாள் பயணமாக இன்று (ஜூன் 22) ரஷ்யா செல்கிறார்.

2வது உலகப் போரில் ஜெர்மனியை ரஷ்யா வெற்றி கொண்டு 75வது ஆண்டு நிறைவடைவதையொட்டி வெற்றி விழாவை ரஷ்யா கொண்டாடுகிறது. விழாவில் பங்கேற்க மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ரஷ்யா செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவும், விழாவில் பங்கேற்க உள்ளது. ஆனால், இரு நாடுகளுக்கும் இடையே எவ்வித பேச்சுவார்த்தையும் நடக்காது என வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராஜ்நாத்சிங்குடன் பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய்சிங்கும் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன் நடக்கும் காணொளிகாட்சிவாயிலாக நடக்கும் மாநாட்டில் அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையே மாஸ்கோவில் நடைபெறும் இந்த பிரமாண்ட அணிவகுப்பில் பங்கேற்பதற்காக இந்தியாவின் முப்படைகளில் இருந்து 75 வீரர்களை கொண்ட குழு ஒன்று ஏற்கனவே ரஷ்யா சென்று உள்ளது. இந்த குழுவினர் சீன பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 11 நாடுகளின் வீரர்களுடன் இந்த அணிவகுப்பில் பங்கேற்கின்றனர்

Leave your comments here...