புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு50 ஆயிரம் கோடியில் வேலைவாய்ப்பை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் – அதன் முக்கிய அம்சங்கள் என்ன?

இந்தியா

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு50 ஆயிரம் கோடியில் வேலைவாய்ப்பை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் – அதன் முக்கிய அம்சங்கள் என்ன?

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு50 ஆயிரம் கோடியில் வேலைவாய்ப்பை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் – அதன்  முக்கிய அம்சங்கள் என்ன?

கொரோனா தொற்றால் ஏற்பட்ட அழிவுகரமான நிலையில் பாதிக்கப்பட்டு, தங்கள் சொந்த ஊர் திரும்பிய ஏராளமான புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் அவல நிலையைக் கண்டு, கிராமங்களில் வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவதற்கு பிரதமர் நரேந்திர மோடி ‘கரிப் கல்யாண் ரோஜ்கர் அபியான்’ என்ற பெயரில் ஒரு பெரிய கிராமப்புற வேலைவாய்ப்புப் பொதுப்பணித் திட்டத்தைத் நேற்றுதொடங்கினார்.

ஜூன் 20 (சனிக்கிழமை) பீகார் மாநிலம், ககாரியா மாவட்டத்தின், ப்ளாக் பெல்டா என்ற பகுதியில் உள்ள தெலிஹார் என்ற கிராமத்தில் இருந்து வீடியோ மாநாடு மூலம் கொடியசைத்து இத்திட்டம் தொடங்கப்பட்டது. இதில் மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மாநில முதல்வர்கள் மற்றும் இதில் பங்கேற்கும் ஆறு மாநிலங்களின் பிரதிநிதிகள், மற்றும் பலர் பங்கேற்றனர்.


இந்த நிகழ்ச்சியின் போது, மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ராஜ் நரேந்திர சிங் தோமர், கொரோனா தொற்று நோய்களின் போது இந்தியாவும், முழு உலகமும் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றன என்று கூறினார். தேசிய முடக்கம் அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்தே, கிராமவாசிகள், ஏழை மக்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மீது கவனம் செலுத்தி பிரதமர் நரேந்திர மோடி அவற்றிற்கு முன்னுரிமை அளிப்பதாகத் தெரிவித்தார். மக்களின் அத்தியாவசியத் தேவைகளை கவனித்துக் கொள்வதற்காக 1,70,000 கோடி ரூபாய் நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டது, மக்களின் சிரமங்களைத் தணிப்பதில் இது பெருமளவில் கை கொடுத்ததாக அவர் தெரிவித்தார்.

பின்னர், பிரதமர் மே 12, 2020 அன்று .20 லட்சம் கோடி ரூபாய்க்கு நலத்திட்டங்களை அறிவித்தார், இதன் முக்கிய நோக்கம் பொருளாதார ஸ்திரத்தன்மையை அளிப்பதாகும். கூடுதலாக, விவசாயம், கிராமப்புற மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றையும் அந்த நலத்திட்டங்களில் அறிவித்தார். இதன் செயல்பாடுகள் மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து தொடங்கப்பட்டு வருகின்றன, இதன் முடிவுகள் வரும் நாட்களில் தெளிவாகத் தெரியும்.6 மாநிலங்களின் 116 மாவட்டங்களில் ”கரிப் கல்யாண் ரோஜ்கர் அபியான்” திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிராம அபிவிருத்தி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் விவரங்களை விரிவாக விவரித்தார். இந்தத் திட்டப்பணிகள் 125 நாட்களுக்கு தொடரும் என்றும், மேலும் 25 பணிகள் அடையாளம் கண்டு அவை விரைவில் நிறைவடையும் என்றும் தெரிவித்தார். இதன் விளைவாக, விரைவாக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இது மிஷன் பயன்முறையில் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கான முக்கியமான படியாகும்.

இந்த முன்முயற்சியின் முக்கிய நோக்கங்கள் பின்வருமாறு:

*ஊர் திரும்பும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கும், பாதிக்கப்பட்ட கிராமப்புற மக்களுக்கும் வாழ்வாதார வாய்ப்பை வழங்குதல்
*பொது உள்கட்டமைப்புடன் கிராமங்களை நிறைவு செய்து வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குதல். அதில் சாலைகள், வீட்டுவசதி, அங்கன்வாடிகள், பஞ்சாயத்து அமைப்புகள், பல்வேறு வாழ்வாதார சொத்துக்கள் மற்றும் சமூக வளாகங்கள் உருவாக்குதல் போன்றவை அடங்கும்
*பல்வேறுவிதமான திட்டப்பணிகளின் மூலம் ஒவ்வொரு புலம்பெயர்ந்த தொழிலாளிக்கும் வரும் 125 நாட்களில் அவர்களது திறமைக்கு ஏற்ப வேலை வாய்ப்பு கிடைப்பதை உறுதிசெய்யும். இந்தத்திட்டம் நீண்ட கால வாழ்வாதாரங்களை விரிவுபடுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் நம்மைத் தயார் செய்யும்.


இந்த நிகழ்ச்சியில் மோடி பேசுகையில் கூறியதாவது:-முந்தைய கால கட்டங்களில் பயனாளிகளுக்காக ஒதுக்கப்படும் பணம் அவர்களிடம் சரியாக போய்ச் சேர்ந்தது இல்லை. ஆனால் இப்போது நிலைமை மாறி இருக்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ஒரு குடும்பத்துக்கு 100 நாட்கள் கண்டிப்பாக வேலை கிடைக்கிறது. இதன்மூலம் ஏராளமான மக்கள் பயன் பெறுகிறார்கள்.

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் திறமைவாய்ந்த ஏராளமான தொழிலாளர்கள் நகரங்களில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப வேண்டிய நிலை உருவானது. நகரங்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்த இந்த தொழிலாளர்களால் இனி கிராமப்புறங்கள் வளர்ச்சி அடையும். அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து கிராமப்புறங்களை மேம்படுத்தும் வகையில் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் கிராமங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. அந்த வகையில் கிராமங்கள் நகரங்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகின்றன. முதல் முறையாக நகரங்களை விட கிராமப்புறங்களில் இணையதள பயன்பாடு அதிகரித்து இருக்கிறது. இணையதள சேவையின் வேகத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Leave your comments here...