சீன பொருட்கள் இறக்குமதிக்கும், விற்பனை செய்வதையும் தடை செய்ய வேண்டும் – தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

அரசியல்இந்தியா

சீன பொருட்கள் இறக்குமதிக்கும், விற்பனை செய்வதையும் தடை செய்ய வேண்டும் – தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

சீன பொருட்கள் இறக்குமதிக்கும், விற்பனை செய்வதையும் தடை செய்ய வேண்டும் –  தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

சீன பொருட்கள் இறக்குமதிக்கும், விற்பனை செய்வதையும் வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா மத்திய அரசிற்கு வலியுறுத்தி உள்ளார். இந்தியாவின் லடாக்கின் கல்வான் பகுதியில் ஐந்து வாரங்களாக இந்திய – சீன படைகள் முகாமிட்டிருந்த நிலையில், ( ஜூன் 15) மாலையில், திடீரென மோதல் ஏற்பட்டது. சீன ராணுவம் நடத்திய அட்டூழிய தாக்குதலில், நம் வீரர்கள், 20 பேர் வீரமரணம் அடைந்தனர். எல்லையில் உள்ள நிலையை மாற்றியமைக்க முயன்ற நம் ராணுவத்திற்கு பதிலடி கொடுத்தனர். இதில் 43 சீன வீரர்கள் உயிரிழந்தனர். இதனால், இரு நாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.இந்த சூழலில் சீனாவின் அத்துமீறிய செயலால் நாடு முழுவதும் மக்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர். சீன தயாரிப்புகள் அனைத்தையும் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழ ஆரம்பித்துள்ளது

இது குறித்து தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- இந்தியா- சீனா 3,488 கிமீ தூர எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. இதில் பல இடங்களில் இரு நாட்டு எல்லை சரியாக நிர்ணயிக்கப்படாததால் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே, 3 ஆண்டுகளுக்குப்பிறகு, கடந்த மே மாதம் கிழக்கு லடாக் பிராந்தியத்தில் இரு நாட்டு ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, சுமார் 6 வாரங்களாக லடாக் எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில் கடந்த 15-ம் தேதி இரவு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீனா ராணுவத்தினர் இடையே மீண்டும் பயங்கர கைகலப்பு ஏற்பட்டது.

இதில் இரு நாட்டு வீரர்களும் கற்களை வீசி தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த பயங்கர மோதலில் இரு தரப்பிலும் உயிர் பலி ஏற்பட்டுள்ளது. இந்திய, சீன படையினர் இடையே நடந்த மோதலில், தமிழக வீரர் உட்பட 20 இந்திய ராணுவத்தினர் பலியாயினர். இந்திய ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் சீன படையில் பலி மற்றும் படுகாயம் அடைந்தோர் சேர்த்து 43 பேர் என கூறப்படுகிறது. 45 ஆண்டுக்குப் பிறகு இந்தியா – சீனா ராணுவம் இடையேயான மோதலில் உயிர்பலி ஏற்பட்டுள்ளதால் போர் மூளும் அபாயம் நிலவி வருகிறது. பிரச்சனை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி நாளை அனைத்து கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சீனா ராணுவத்தின இந்த மனிதாபிமற்ற செயலை ஐநா சபை உள்பட பல உலக நாடுகளும் கண்டித்துள்ளது. மேலும் போர்பதற்றம் நிலவும் சூழலில் இருநாடுகளும் இந்த விவகாரத்தில் பேசி தீர்வு காண வேண்டுமென அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.சீனாவின் இந்த இரக்கமற்ற செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனா பொருட்களை இறக்குமதி செய்வதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். அகில இந்திய வர்த்தக அமைப்பு சீனாவுடனான வர்த்தகத்தை துண்டித்து கொள்ள வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

சீனாவிலிருந்து பொம்மைகள், துணிகள், ஆடைகள், தினசரி உபயோக பொருட்கள், சமையல் சாதனங்கள், ஃபர்னிச்சர்கள், வன்பொருள், காலணிகள், கைப்பைகள், பெட்டிகள் மின்னணு பொருட்கள் அழகுற்றும் பரிசு பொருட்கள், கடியாரங்கள், நகைகள், காகிதம், எனப் பல அடங்கும். தற்போது இந்தியா வருடத்துக்கு சுமார் ரூ.5.25 லட்சம் கோடி அளவுக்கு இறக்குமதி செய்து வருகிறது. இப்படி சீனாவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் பட்டியலை தயாரித்து, அவற்றை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசை தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்துகிறேன்.

மேலும் தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள சீனா பொருட்களை உடனடியாக திருப்பி அனுப்பவதுடன், சீனா பொருட்களை வாங்கதீர்கள் என்பதற்கு பதிலாக வணிகர்கள் அதனை விற்பனை செய்வதை மத்திய அரசு தடைவிதித்தால், சீனா பொருட்கள் மக்களிடம் கொண்டு சேர்ப்பது தடை பட்டு விடும். ஆகவே சீனாவிற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் சீனா பொருட்கள் இறக்குமதி, விற்பனை ஆகியவற்றை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave your comments here...