லடாக்கில் உயிரிழந்த ராணுவ வீரர் பழனியின் உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்..!

இந்தியா

லடாக்கில் உயிரிழந்த ராணுவ வீரர் பழனியின் உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்..!

லடாக்கில் உயிரிழந்த ராணுவ வீரர் பழனியின் உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்..!

இந்தியாவின் லடாக்கின் கல்வான் பகுதியில் ஐந்து வாரங்களாக இந்திய – சீன படைகள் முகாமிட்டிருந்த நிலையில், ( ஜூன் 15) மாலையில், திடீரென மோதல் ஏற்பட்டது. சீன ராணுவம் நடத்திய அட்டூழிய தாக்குதலில், நம் வீரர்கள், 20 பேர் வீரமரணம் அடைந்தனர். எல்லையில் உள்ள நிலையை மாற்றியமைக்க முயன்ற நம் ராணுவத்திற்கு பதிலடி கொடுத்தனர். இதில் 43 சீன வீரர்கள் உயிரிழந்தனர். இதனால், இரு நாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. சீனா அட்டூழியத்தால், வீரமரணம் அடைந்தவர்களில் ராமநாதபுரத்தை சேர்ந்த பழனியும் ஒருவர். இவர் ராணுவத்தில் ஹாவில்தாராக பணிபுரிந்து வந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், கடுகலூர் கிராமத்தில் காளிமுத்து மற்றும்லோகாம்பால் தம்பதிக்கு மூத்த மகனாக பிறந்தவர் பழனி. இவருக்கு இரு சகோதரர்கள் உள்ளனர். பெற்றோருக்கு குறைவான சம்பளம் பெற்று வந்தனர். இதனால், பழனியால் 10ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. இதனால் 18 வயதிலேயே ராணுவத்தில் சேர்ந்தார். அதன் பின்னர் தான் தொலைதூர கல்வி மூலம் பிளஸ் h2 மற்றும் பிஏ பட்டம் பெற்றார். மனைவி வனிதாதேவி(33)யும் தனியார் கல்லூரியில் உதவியாளராக பணிபுரிகிறார்.

ராணுவ வீரர் பழனியின் உடல், ராணுவ விமானம் மூலம் மதுரை வந்தடைந்தது. மதுரை மாவட்ட கலெக்டர் வினய் மலரஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கிருந்து வாகனம் மூலம் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் எடுத்து செல்லப்பட்டது.கிராம எல்லையில் இருந்து சுமார் 2 கி.மீ தூரத்திற்கு அவரது உடல் ராணுவ வாகனத்தில் மாற்றப்பட்டு ராணுவ மரியாதையுடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. தேசிய கொடி போர்த்திய பழனியின் உடலை பார்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்தினர். அவரது குடும்பத்துக்கு ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவ ராவ் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். பழனியின் உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது சொந்த கிராமம் பெரும் சோகத்தில் மூழ்கியது.

Leave your comments here...