சீனா எல்லையில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு குமரியில் பாஜக சார்பில் அஞ்சலி..!
- June 18, 2020
- jananesan
- : 1152
- Indian Army
இந்தியாவின் லடாக்கின் கல்வான் பகுதியில் ஐந்து வாரங்களாக இந்திய – சீன படைகள் முகாமிட்டிருந்த நிலையில், ( ஜூன் 15) மாலையில், திடீரென மோதல் ஏற்பட்டது. சீன ராணுவம் நடத்திய அட்டூழிய தாக்குதலில், நம் வீரர்கள், 20 பேர் வீரமரணம் அடைந்தனர். எல்லையில் உள்ள நிலையை மாற்றியமைக்க முயன்ற நம் ராணுவத்திற்கு பதிலடி கொடுத்தனர். இதில் 43 சீன வீரர்கள் உயிரிழந்தனர். இதனால், இரு நாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. சீனா அட்டூழியத்தால், வீரமரணம் அடைந்தவர்களில் தமிழகத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த பழனியும் ஒருவர். இவர் ராணுவத்தில் ஹாவில்தாராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் சீனா எல்லையில் நடந்த மோதலில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக சார்பில் பல்வேறு இடங்களில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் குருந்தன்கோடு ஒன்றியம் திங்கள்நகர் ராதாகிருஷ்ணன் கோவில் அருகே எல்லையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குமரி மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவரும் மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் .சிவகுமார், முன்னாள் மாவட்ட தலைவர் திரு.முத்துகிருஷ்ணன், துணை தலைவர் குமரி ப.ரமேஷ், சக்தி ஆதிரா, மற்றும் மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகளும் , பொதுமக்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். இதேபோல் பத்மனாபபுரம், வில்லுக்குறி, குளச்சல் ஆகிய பகுதிகளில் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
Leave your comments here...