வரதட்சணை கொடுமை..? மனைவிக்கு செல்போனில் மெசேஜ் மூலம் முத்தலாக் கூறிய இன்ஜினியர் மீது பாய்ந்தது வழக்கு…!!

இந்தியா

வரதட்சணை கொடுமை..? மனைவிக்கு செல்போனில் மெசேஜ் மூலம் முத்தலாக் கூறிய இன்ஜினியர் மீது பாய்ந்தது வழக்கு…!!

வரதட்சணை கொடுமை..? மனைவிக்கு செல்போனில் மெசேஜ் மூலம் முத்தலாக் கூறிய இன்ஜினியர் மீது பாய்ந்தது வழக்கு…!!

இஸ்லாமிய பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் முத்தலாக் தடை மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதாவின்படி, உடனடியாக மூன்று முறை தலாக் கூறி, விவாகரத்து செய்யும் முறை ரத்து செய்யப்படுகிறது. இதை மீறி தலாக் கூறி விவாகரத்து செய்யும் கணவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும்.

பெங்களூரு டி.ஜே.ஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சி.எல்.ராமையா லே-அவுட்டில் வசித்து வருபவர் முகமது தாரிக். கம்ப்யூட்டர் என்ஜினீயர். இவருக்கு 26 வயதில் மனைவி உள்ளார். இவர்கள் 2 பேரும் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தனர். திருமணத்தின் போது வரதட்சணையாக கார் கொடுக்க வேண்டும் என்று முகமது தாரிக்கின் குடும்பத்தினர் கேட்டதாக தெரிகிறது. இதற்கு பெண் வீட்டாரும் சம்மதித்தனர்.

ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் வரதட்சணையாக முகமது தாரிக்கிற்கு, பெண் வீட்டார் கார் கொடுக்கவில்லை. மேலும் ஒரு ஆண்டுக்குள் கார் வாங்கி கொடுப்பதாக அந்த பெண்ணின் பெற்றோர் கூறி இருந்ததாக தெரிகிறது. அவர்களால் கார் வாங்கி கொடுக்க முடியவில்லை. இதுதொடர்பாக முகமது தாரிக் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

இதுதொடர்பாக 2 குடும்பத்தினர் இடையே சண்டை ஏற்பட்டது. இதையடுத்து, முகமது தாரிக்கின் மனைவி, அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். மேலும் 2 குடும்பத்தினரும் சமாதானமாக பேசி, நாம் சேர்ந்து வாழலாம் என்று கணவரின் செல்போனுக்கு, முகமது தாரிக்கின் மனைவி குறுந்தகவல் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் வரதட்சணை கொடுக்காததால் ஆத்திரத்தில் இருந்த முகமது தாரிக் தனது மனைவியுடன் வாழ பிடிக்காததால், செல்போனில் முத்தலாக் என்று 3 முறை கூறி குறுந்தகவல் அனுப்பி வைத்தார்.இதைப்பார்த்து அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். நடந்த சம்பவங்கள் குறித்து டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் கொடுத்தார். அதன்பேரில், முகமது தாரிக் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave your comments here...