சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்தது சென்னை ஐ.ஐ.டி ..!

இந்தியா

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்தது சென்னை ஐ.ஐ.டி ..!

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்தது சென்னை ஐ.ஐ.டி ..!

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.

தேசிய அளவில் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கடந்த 2016-ம் ஆண்டு முதல் வெளியிட்டு வருகிறது. ஒட்டுமொத்த பிரிவு, பல்கலைக்கழகங்கள், பொறியியல், கல்லூரிகள், மேலாண்மை, மருத்துவம் உள்ளிட்ட 9 பிரிவுகளின்கீழ் நாட்டின் முதல் 100 கல்வி நிறுவனங்கள் பட்டியலிடப்படும். ஆண்டுதோறும் இதுபோன்று தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். இந்த ஆண்டுக்கான பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று வெளியிட்டார்.

இந்நிலையில் இந்த வருடத்திற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இந்த தரவரிசை பட்டியலில் இடம்பெறுவதற்காக மொத்தம் 5805 கல்வி நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசையில் பெங்களூரு ஐஐஎஸ்சி முதலிடத்தை பிடித்துள்ளது. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தையும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.

NIRF தரவரிசைப் பட்டியல் 2020-ஐ (தேசிய உயர்கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு)
பிரிவு: பல்கலைக்கழகங்கள்

1.இந்திய அறிவியல் கழகம், பெங்களூரு
2.ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுதில்லி
3. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், வாரணாசி

பிரிவு: மேலாண்மை
1.இந்திய மேலாண்மை கழகம், அகமதாபாத்
2.இந்திய மேலாண்மை கழகம், பெங்களூரு
3.இந்திய மேலாண்மை கழகம், கொல்கத்தா

பிரிவு: சட்டம்
1.இந்திய பல்கலைக்கழகத்தின் தேசிய சட்டப் பள்ளி, பெங்களூரு
2.தேசியசட்டப் பல்கலைக்கழகம், புதுதில்லி
3.நல்சர் சட்டப் பல்கலைக்கழகம், ஹைதராபாத்

பிரிவு: பல் மருத்துவம்
1.மவுலானா ஆசாத் பல் மருத்துவ அறிவியியல் மையம், தில்லி
2.மணிபல் பல் மருத்துவ அறிவியல் கல்லூரி, உடுப்பி
3.டாக்டர் டி.ஒய். பாட்டீல் வித்யாபீத், புனே

பிரிவு: கல்லூரிகள்
1.மிரண்டா ஹவுஸ், புதுதில்லி
2.லேடி ஸ்ரீராம் பெண்கள் கல்லூரி, புதுதில்லி
3.இந்து கல்லூரி, புதுதில்லி
4.புனித ஸ்டீபன் கல்லூரி, புதுதில்லி
5.பிரசிடென்சி கல்லூரி, சென்னை

பிரிவு: மருத்துவம்
1.அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம், புதுதில்லி
2.முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், சண்டிகர்
3.கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி, வேலூர்

பிரிவு: மருந்தியல்
1.ஜமியா ஹம்தர்த், புதுதில்லி
2.பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர்
3.தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், மொஹாலி

பிரிவு: கட்டிடக்கலை
1.இந்திய தொழில்நுட்ப மையம், காரக்பூர்
2.இந்திய தொழில்நுட்ப மையம், ரூரகே
3.இந்திய தொழில்நுட்ப மையம், கோழிக்கோடு

Leave your comments here...