ககன்யான் திட்டத்தின் ஆளில்லா விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் ஒத்திவைப்பு – இஸ்ரோ தலைவர் சிவன்

இந்தியா

ககன்யான் திட்டத்தின் ஆளில்லா விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் ஒத்திவைப்பு – இஸ்ரோ தலைவர் சிவன்

ககன்யான் திட்டத்தின்  ஆளில்லா விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் ஒத்திவைப்பு – இஸ்ரோ தலைவர் சிவன்

விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முன்னோட்டமாக ஆளில்லா விண்கலத்தை அனுப்பும் இஸ்ரோவின் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ககன்யான் திட்டம் என்பது விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் மட்டுமல்லாது, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் முதல் முயற்சியும் மட்டுமல்லாமல், மனிதர்கள் தொடர்ந்து விண்வெளியில் இருக்கும் வகையில் புதிய விண்வெளி நிலையம் உருவாக்குவதாகும். 3 நிலைகளில் ககன்யான் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம். குறுகிய திட்டங்களாக ஆளில்லா விண்கலத்தை 2020 டிசம்பர் மாதத்திலும், 2021-ம் ஆண்டின் ஜூன் மாதத்திலும் விண்ணுக்கு அனுப்ப இருக்கிறோம். அதைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டில் மனிதர்களுடன் செல்லும் விண்கலமான ககன்யானை அனுப்ப உள்ளோம். மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டமும், விண்வெளியில் மனிதர்கள் நிலையாக இருக்கும் வகையில், விண்வெளி நிலையத்தை உருவாக்கும் திட்டமும் இருக்கிறது.

இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக ககன்யான் திட்டப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, ஆளில்லா விண்கலம் அனுப்பம் திட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.அதேபோல் இந்த ஆண்டு இறுதி அல்லது தொடக்கத்தில் செயல்படுத்துவதாக இருந்த சந்திரயான்-3 திட்டமும் 6 மாத காலத்திற்கு ஒத்திவைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார்.ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு ரஷியாவில் பயிற்சிக்கு அனுப்பப்பட்டனர். ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவர்களின் பயிற்சியும் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது

Leave your comments here...