ஒரு முறை பயன்படுத்தும் லேஸ், குர்குரே பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு..!

சமூக நலன்தமிழகம்

ஒரு முறை பயன்படுத்தும் லேஸ், குர்குரே பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு..!

ஒரு முறை பயன்படுத்தும்  லேஸ், குர்குரே பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்கு தடை – தமிழக அரசு  உத்தரவு..!

உணவுப் பொருட்கள் மற்றும் ‘நொறுக்குத் தீனிகளை அடைப்பதற்காக ஒருமுறை பயன்படுத்தும் , பிளாஸ்டிக் பைகளுக்கும், தமிழக அரசு தடை விதித்துள்ளது.

தமிழகத்தில், 2018 ஜூன், 5 முதல், ஒரு முறை பயன்படுத்தி துாக்கி எறியக்கூடிய, பிளாஸ்டிக் பைகள், டீ கப் போன்றவற்றை தயாரிக்கவும், விற்பனை செய்யவும், தமிழக அரசு தடை விதித்தது.எனினும், உணவு பண்டங்கள், ஒரு முறை பயன்படுத்தி துாக்கி எறியக்கூடிய, பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இதற்கு எதிராக பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூனில், தமிழக அரசின் தடை உத்தரவு செல்லும் என தீர்ப்பளித்தது.

பின்னர் ஒரு முறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை 2019 ஜனவரி 1 முதல் தயாரிக்கவும், விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்படுவதாக கடந்த ஜூன் மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதன்படி ஒரு முறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கு மாற்றாக 14 வகையான பொருட்களை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது

இந்நிலையில், ‘பிளாஸ்டிக் மாசு இல்லா தமிழ்நாடு’ என்ற இலக்கை முழுமையாக எட்ட முடியவில்லை. எனவே, அவற்றுக்கும் தடை விதிக்க வேண்டும் என, தமிழ்நாடு சுற்றுச்சூழல் வாரியத் தலைவர், அரசுக்கு கடிதம் எழுதினார்.அதை பரிசீலனை செய்த அரசு, சிப்ஸ் உள்ளிட்ட நொறுக்குத்தீனிகளை அடைத்து விற்க பயன்படுத்தப்படும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டிருந்த விலக்கை நீக்கி புதிய ஆணை பிறக்கப்பட்டுள்ளது. இதனால் லேஸ், குர்குரே உள்ளிட்ட பல உணவுப் பொருட்கள் நிறுவனங்கள் தற்போது பயன்படுத்தி வரும் பாக்கெட்டுகளை அவர்களால் பயன்படுத்த முடியாது. எனவே அதில் தின்பண்டங்கள் அடைப்பதற்கு பயன்படுத்தப்படும், பிளாஸ்டிக் பைகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும், தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave your comments here...