தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சியம்மன் குறித்து அவதூறு பேச்சு : இந்த ஆறு மீதும் இந்து அறநிலையத்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை..? ஹெச்.ராஜா கேள்வி..!

தமிழகம்

தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சியம்மன் குறித்து அவதூறு பேச்சு : இந்த ஆறு மீதும் இந்து அறநிலையத்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை..? ஹெச்.ராஜா கேள்வி..!

தஞ்சை பெரிய கோவில்,  மதுரை மீனாட்சியம்மன்  குறித்து அவதூறு பேச்சு : இந்த ஆறு மீதும் இந்து அறநிலையத்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை..? ஹெச்.ராஜா கேள்வி..!

தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில்கள் குறித்து தவறாக பேசியுள்ள நாத்திக வீரமணி, நடிகர் சிவக்குமார், ஜோதிகா, ப.ரஞ்சித், கௌதமன், விஜய் சேதுபதி ஆகியோர் மீது இந்து அறநிலையத்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை..? என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளர்.

இது குறித்து அவர் தனது முகநூல் பதிவில்:- திருப்பதி ஏழுமலையான் கோவிலைப் பற்றி தவறாகப் பேசிய நடிகர் சிவக்குமார் மற்றும் 7 பேர் மீது திருமலை தேவஸ்தானம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க நடவடிக்கை.

ஆனால் இந்து கோவில்கள் குறித்து குறிப்பாக தஞ்சை பெரிய கோயில், மதுரை மீனாட்சியம்மன் குறித்து தவறாகப் பேசியுள்ள நாத்திக வீரமணி, நடிகர் சிவக்குமார், ஜோதிகா, ப.ரஞ்சித், கௌதமன், விஜய் சேதுபதி ஆகியோர் மீது இந்து கோவில்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அறநிலையத்துறை இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை ஏன்?

தமிழகத்தில் உள்ளது இந்து சமய அறநிலையத் துறை அல்ல. இது இந்து விரோத ஊழல் சக்திகளால் நிரப்பப் பட்டுள்ளது என்று நான் பலமுறை கூறியுள்ளேன். ஆகவே தான் அத்துறை திருப்பதி தேவஸ்தானம் போல் நம் கோவில்களின் மீது நாத்திக, மதம் மாறிய தீய சக்திகளின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.தொடர்ந்து இவர்கள் மாமன்னன் இராஜராஜனையும் தஞ்சை பெரிய கோயிலையும் குறிவைத்து தாக்குவதன் நோக்கம் என்ன? ஏன்?

வீரமணி மாமன்னன் இராஜராஜனை முட்டாள் ராஜா, வெங்காயம் என்றெல்லாம் ஏசினார். தஞ்சை பெரிய கோவிலில் அதைக் கண்ட தங்கள் பங்களிப்பை நல்கிய ஒவ்வொருவர் பெயரும் கோவில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் எவரும் செல்ல எவ்வித தடையும் இல்லை. ஆனால் நடிகர் சிவக்குமார் தீண்டாமை உள்ளதாக அவதூறு பரப்புகிறார். அவரது மருமகள் ஜோதிகா தஞ்சை பெரிய கோயில் பராமரிக்கப் படுவது பொறுக்காமல் பொறுமுகிறார். அதை பராமரிக்கும் செலவிற்கு ஆஸ்பத்திரி கட்டலாமாம். ஆனால் இதே ஜோதிகா யாரும் பிணம் புதைத்த இடம் தாஜ்மகாலுக்கு போக வேண்டாம். அதை பராமரிக்க வேண்டாம் அந்த செலவிற்கு ஆஸ்பத்திரி கட்டலாம் என்று ஏன் பேசவில்லை.

பல ஆயிரம் கோடி அரசு மானியத்தில் ஹஜ் பயணம் செய்வதை தவிர்க்கலாம் என்று பேசுவாரா? நாம் இந்துக்கள் முஸ்லீம்களின் இறை நம்பிக்கையை மதிக்கிறோம். அவர்களின் ஹஜ் புனிதப் பயணத்தை மதிக்கிறோம். ஆனால் அவர் தன் மதம் பற்றிய விஷயங்களைப் பற்றி பேசுவதில்லை. இந்து கோவில்கள் பராமரிக்கப் படுவது பற்றி வயிற்றெரிச்சல்.

அதேபோல் மதம் மாறிய ப.ரஞ்சித், கௌதமன் போன்றோரும் மாமன்னன் இராஜராஜன் மீதும் தஞ்சை பெரிய கோயில் மீதும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். காரணம் இவர்கள் அனைவருக்கும் 1000 ஆண்டுகளுக்குப் பிறகும் தமிழர்களின் திறமை, அறிவு, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றின் சின்னமாக தஞ்சை பெரிய கோயில் இருப்பதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இவர்கள் ஒன்று இந்து விரோத ஈ.வெ.ரா கொள்கை கொண்டவர்கள், அல்லது மதம் மாறியவர்கள், அல்லது மாற்று மத சம்பந்தத்தால் தடுமாற்றத்தில் இருப்பவர்கள் என்பதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. நம் இந்து மத, தமிழ்ச் சமுதாய பெருமைகளை கொச்சைப்படுத்தும் இவர்களை அடையாளம் காண்போம்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்

Leave your comments here...