நடிகர் சிவக்குமார் , திக கலி.பூங்குன்றன் மீது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் புகார் கொடுக்காதது ஏன்.? இராம இரவிக்குமார் கேள்வி.?

தமிழகம்

நடிகர் சிவக்குமார் , திக கலி.பூங்குன்றன் மீது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் புகார் கொடுக்காதது ஏன்.? இராம இரவிக்குமார் கேள்வி.?

நடிகர் சிவக்குமார் ,  திக கலி.பூங்குன்றன் மீது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்  புகார் கொடுக்காதது ஏன்.? இராம இரவிக்குமார் கேள்வி.?

தஞ்சை பெரிய கோவில் குறித்து அவதூறாக பேசிய நடிகர் சிவக்குமார் மீதும் ,மதுரை மீனாட்சிஅம்மன் திருக்கல்யாணத்தை அவதூறாக எழுதிய திராவிடர் கழகம் பொது செயலாளர் கலி. பூங்குன்றன் மீதும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் புகார் கொடுக்காதது ஏன் என தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா ? இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் இராம இரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளர்.

திருப்பதி மலையில் தவறுகள் நடைபெறுவதாகவும், அங்கு பக்தர்கள் செல்ல வேண்டாம் என்றும் நடிகர் சிவகுமார் பேசி வெளியான வீடியோ ஒன்று தொடர்பாக தமிழ் மாயன் என்பவர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஈமெயில் மூலம் தகவல் அனுப்பியுள்ளார். தமிழ் மாயன் கொடுத்த தகவலின் அடிப்படையில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் திருப்பதி மலையில் உள்ள இரண்டாவது நகர காவல் நிலையத்தில் நடிகர் சிவக்குமார் மீது புகார் செய்யப்பட்டது. தேவஸ்தானம் அளித்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.முன்னதாக சிவகுமாரின் மருமகளும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் குறித்து பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது ஜோதிகாவின் கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழுந்தன.

இந்நிலையில் இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் இராம இரவிக்குமார் பல்வேறு கேள்விகளை முன்வைத்து தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் அதில்:-
திருப்பதி பெருமாள் கோவில் குறித்தும், அவதூறு பரப்பும் வகையில் பேசிய நடிகர் சிவகுமார் மீது திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் புகார் கொடுத்திருக்கிறார்கள். திருப்பதி காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்து தமிழர் கட்சி தொடர்ந்து, இவரது இந்து விரோத பேச்சுக்களை கண்டித்து பேசியும் புகார் தெரிவித்து இருந்தோம். திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு பொறுப்பாளர்களுக்கு இந்து தமிழர் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இதேபோல தஞ்சை ராஜராஜசோழன் கட்டிய கோவிலில் தீண்டாமை இருக்கிறது அங்கே கருவறைக்குள் நுழைய சிவலிங்கம் செய்தவருக்கு அனுமதி இல்லை என்று அவதூறாக பொய்யுரை பரப்பி பக்தர்களை சிவனடியார்களை கொச்சைப்படுத்திய சிவக்குமார் மீது தஞ்சை பெரிய கோயில் நிர்வாகம் இதுவரை புகார் அளிக்காதது ஏன்?

அதுபோதமிழ்நாட்டில் மதுரை அன்னை மீனாட்சி திருக்கல்யாணம் குறித்து அவதூறான வகையிலே மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் “கல் முதலாளிகள்” யாருக்கு உணவு படைக்கிறார்கள்? இந்து கோவில் தங்கங்களை எல்லாம் எடுத்து வங்கியில் அடமானம் வைத்து அந்த பணத்தை பொதுவாக செலவு செய்யவேண்டும். கோவில் சொத்துக்கள் சம்பந்தமாகவும், திருக்கல்யாணம் நடத்த வேண்டுமென்றால் கல் முதலாளிகள் அனுமதி கேட்கட்டும். வருட வருடம் கல்யாணம் என்றெல்லாம் கிண்டல் செய்து முகநூலில் பேசினார். அதன் தலைவர் வீரமணி அவர்களும் இதே கருத்தை பல நேரங்களில் பேசியிருக்கிறார்.

இந்து தமிழர் கட்சி மாநில குழு உறுப்பினர் பரணிதரன் புகார்

உடனே இந்து தமிழர் கட்சியின் சார்பில் மாநிலக்குழு உறுப்பினர் கடலூர் என்ஆர் பரணிதரன் சார்பில் கடலூர் காவல் நிலையத்திலும், மாநில குழு உறுப்பினர் மனோஜ் குமார் சார்பில் பழனி காவல் நிலையத்திலும் இந்து எழுச்சி முன்னணி சார்பில் ராமராஜ் அவர்கள் தேனி மாவட்ட காவல்துறையிடம் புகார் தெரிவித்து இருக்கிறார்கள். வழக்கறிஞர் அஸ்வத்தாமன் என்பவர் சென்னையில் புகார் தெரிவித்திருக்கிறார்.

திருப்பதி பெருமாள் கோவில் குறித்து அவதூறாக பேசிய நடிகர் சிவக்குமார் மீது திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் புகார் கொடுத்தது போல இதுவரை இந்து சமய அறநிலையத்துறை மீனாட்சி திருக்கோயில் நிர்வாகம் சார்பில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கலி பூங்குன்றன் மீது புகார் கொடுக்காதது ஏன்?

மதுரை ஆதீனம் குரல் எழுப்பாது ஏன் ? இந்து சமயத்தின் மடாதிபதிகள் கண்டன குரல் எழுப்ப வேண்டும். அன்னை மீனாட்சியின் பக்தர்கள் இதுவரை போராடாதது ஏன் ? என்று விடை தெரியாமல் தவிக்கிறேன். உடனடியாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் திராவிடர் கழகம் பூங்குன்றன் மீது புகார் தெரிவிக்க வேண்டும் என்று இந்து தமிழர் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

அதுமட்டுமல்லாது இவர் மீது கொடுக்கப்பட்ட புகார் மனுக்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை காவல்துறையை கேட்டுக்கொள்கிறோம். “ஆலயத்தின் வருமானத்தில் மட்டும் கவனம் செலுத்தும் அரசு, அறநிலையத்துறை இதுபோன்று ஆலய அவமதிப்பு செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிய வேண்டும். அப்பொழுது மட்டுமே இந்து தெய்வங்கள் குறித்து விமர்சனம் செய்யும் போக்கு ஒரு கட்டுப்பாட்டுக்குள் வரும். நிச்சயம் அது நடக்க வேண்டும் என்று அன்னை மீனாட்சியை மனதார பிராத்திக்கிறேன். தஞ்சாவூர் ராஐராஜ சோழன் பேரருள் புரியட்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் இராம.இரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் இந்துசமய அறநிலையத்துறை மற்றும் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.!

Leave your comments here...