காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா.? மாநகராட்சி அதிகாரிகள் சோதனை..!

தமிழகம்

காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா.? மாநகராட்சி அதிகாரிகள் சோதனை..!

காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா.? மாநகராட்சி அதிகாரிகள் சோதனை..!

நெல்லை மாவட்டத்தில் கொரோனா எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்த போதிலும், அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி வருகிறார்கள்.

இந்நிலையில் பல பல்பொருள் அங்காடிகளில் உணவு பொருள் பாக்கெட்களில் காலாவதி, தயாரிப்பு தேதி விவரங்களை ஸ்டிக்கராக ஒட்டி விற்பனை செய்கின்றனர். சில கடைகளில் அந்த பொருளின் காலாவதி தேதி முடிந்த பின்னரும், பழைய ஸ்டிக்கரை எடுத்துவிட்டு புதிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா சோதனை நடைபெற்றது.

இதனை முன்னிட்டு நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என மாநகராட்சி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

Leave your comments here...