இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி சண்டை; தமிழகத்தை சேரந்த ராணுவ வீரர் வீரமரணம் : குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிவாரணம் – முதல்வர் உத்தரவு..!

தமிழகம்

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி சண்டை; தமிழகத்தை சேரந்த ராணுவ வீரர் வீரமரணம் : குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிவாரணம் – முதல்வர் உத்தரவு..!

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி சண்டை;  தமிழகத்தை சேரந்த ராணுவ வீரர் வீரமரணம் :  குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிவாரணம் – முதல்வர் உத்தரவு..!

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் மதியழகன் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுக்கா ஸ்ரீரங்கைகாடு கிராமத்தை சேர்ந்தவர் பி.மதியழகன் (வயது 40). இராணுவத்தின் 17வது மெட்ராஸ் படைப்பிரிவில் அவில்தார் பதவி விகித்து வந்தார். கடந்த 6 மாதத்துக்கு முன்னர் தான் ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள சுந்தர்பனி படை பிரிவுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். அங்கு பிராங்கி படையில் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் எல்லையில் இருந்து திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மதியழகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அருகில் இருந்த ராணுவ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் அவர் உயிரிழந்தார்.இவருக்கு தமிழரசி என்ற மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ராணுவ வீரர் மதியழகன் உடலை இன்று சொந்த ஊருக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்நிலையில், ராணுவ வீரர் மதியழகன் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.தன்னலம் கருதாமல், தியாக உணர்வோடு இந்திய திருநாட்டின் பாதுகாப்புப் பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு, வீர மரணம் அடைந்த அவில்தார் மதியழகன் அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.வீரமரணம் அடைந்த மதியழகனுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, அவரது குடும்பத்தினரை மாவட்ட கலெக்டர் நேரில் சந்தித்து ஆறுதல் கூற உத்தரவிட்டுள்ளார்.

Leave your comments here...