உதவி கேட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை ; 4 முதியவர்கள் உட்பட 6 பேர் போக்சோ சட்டத்தில் கைது..!

தமிழகம்

உதவி கேட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை ; 4 முதியவர்கள் உட்பட 6 பேர் போக்சோ சட்டத்தில் கைது..!

உதவி கேட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை  ; 4 முதியவர்கள் உட்பட 6 பேர் போக்சோ சட்டத்தில் கைது..!

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே வசிக்கும் 8 வயது சிறுமி வறுமையால் பிறர் வீடுகளில் உதவி கேட்பது வழக்கம். இந்நிலையில் பணம் தருபவர்கள் தன்னிடம் தவறாக நடப்பதை சிறுமி அப்பாவியாக கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை, நடந்த சம்பவத்தை சிறுமி பேசும் ஒரு ஆடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். ஆடியோ பற்றி விசாரிக்க எஸ்.பி., ஸ்ரீநாத் உத்தர விட்டார்.

இது குறித்து குளச்சல் மகளிர் போலீசார் சம்பந்தப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரிடம் நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். அப்போது, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை வேலை தொடர்பாக தினமும் வெளியூர் சென்று வந்துள்ளார். தாயார் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டார்.வறுமை காரணமாக அந்தச் சிறுமி, அந்தத் தெருவிலுள்ள வீடுகளுக்குச் சென்று உதவி கேட்பது வழக்கம் என்று கூறப்படுகிறது. இதனால், சிறுமி தகுந்த பாதுகாப்பு இன்றி தனியாக சுற்றி திரிந்துள்ளார்.இதை சாதகமாக பயன்படுத்தி அதே பகுதியை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உள்பட 6 பேர் சிறுமிக்கு பண ஆசை காட்டி அவ்வப்போது பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்தது.

இதுதொடர்பாக புதுக்கடை போலீசார் விசாரணை நடத்தி அதே பகுதியைச் சேர்ந்த 75 வயதான முகமது நூகு, 52 வயதான சகாயதாசன், 53 வயதான ஜாகீர் உசேன், 66வயதான அப்துல் ஜாபர் ஆகியோரும் 2 சிறுவர்களும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.முகமது நூகு உள்பட 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், கைது செய்யப்பட்ட 2 சிறுவர்களும் நாங்குநேரியில் உள்ள சிறுவர் சீர் திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Leave your comments here...