விசா விதிமுறை மீறல் ; தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட 2,550 வெளிநாட்டினர் 10 ஆண்டுகளுக்கு இந்தியாவுக்குள் நுழைய தடை ..!

இந்தியா

விசா விதிமுறை மீறல் ; தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட 2,550 வெளிநாட்டினர் 10 ஆண்டுகளுக்கு இந்தியாவுக்குள் நுழைய தடை ..!

விசா விதிமுறை மீறல் ;  தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட 2,550 வெளிநாட்டினர்  10 ஆண்டுகளுக்கு இந்தியாவுக்குள் நுழைய தடை ..!

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட வெளிநாடுகளிலிருந்தும் பெரும்பாலோனோர் பங்கெடுத்துக்கொண்டது தொற்று பரவலுக்கு மிக முக்கியக் காரணமாக கருதப்பட்டது. இந்த நிலையில் இதன் தலைவரான மௌலானா சாத் மீது பண மோசடி வழக்கினை அமலாக்க இயக்குநரகம் பதிந்துள்ளது. முன்னதாக கொரோனா தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் வகையில் தப்லீக் ஜமாத் கூட்டத்தினை கூட்டியதற்காகக் காவல் துறையினர் இவர் மீது குற்றம் சாட்டியிருந்தனர்.இந்த நிலையில் இதன் தலைவரான மௌலானா சாத் மீது பண மோசடி வழக்கினை அமலாக்க இயக்குநரகம் பதிந்துள்ளது.

இந்நிலையில் மவுலானா சாத் வழக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவிலிருந்து சிபிஐ கேட்டு உள்ளது. இந்த வழக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் சிபிஐ கோரியுள்ளது.முன்னதாக, அமலாக்க இயக்குநரகம் (இ.டி) மற்றும் ஐ-டி துறைகளும் மார்கஸ் வழக்கு தொடர்பாக டெல்லி போலீஸ் குற்றப்பிரிவு சேகரித்த தகவல்களை கேட்டு பெற்றன.பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அமலாக்க இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டன, இது சாத் மீது பணமோசடி வழக்கு பதிவு செய்துள்ளது.இந்த மாத தொடக்கத்தில், டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு தப்லிகி ஜமாத் உறுப்பினர்களின் நிதி தொடர்பான பல ஆவணங்களை சேகரித்ததுடன், ஜமாத் தலைவர் மவுலானா சாதின் ஐந்து நெருங்கிய நண்பர்களின் பாஸ்போர்ட்டுகளையும் பறிமுதல் செய்தது.மே 16 ந்தேதி மவுலான சாதின் நெருங்கிய உதவியாளரான முர்சலீனை அமலாக்கதுறை விசாரித்தது, வரும் நாட்களில், சிபிஐ மவுலானா சாத் மற்றும் மார்கஸ் டிரஸ்ட் குறித்து விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

இந்தநிலையில் இந்த மாநாட்டில் வெளிநாடுகளில் இருந்து வந்து பங்கேற்ற பலரும் விசா விதிமுறையை மீறி நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மசூதிகளுக்கு சென்று தங்கியதாக மாநில அரசுகள் புகார் தெரிவித்தன. இதனால் அந்த மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினரில் 2,550 பேரை கருப்பு பட்டியலில் சேர்த்து, அவர்கள் அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தியாவுக்குள் நுழைய தடைவிதித்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மாநிலங்கள் கொடுத்த விவரங்களின் அடிப்படையில், இந்த நடவடிக்கையை உள்துறை அமைச்சகம் எடுத்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave your comments here...