விரைவில் “பே-டிஎம்” மூலம் அரசு பேருந்துகளில் கட்டணம் வசூல் : அமைச்சர் தகவல்..?

தமிழகம்

விரைவில் “பே-டிஎம்” மூலம் அரசு பேருந்துகளில் கட்டணம் வசூல் : அமைச்சர் தகவல்..?

விரைவில் “பே-டிஎம்” மூலம் அரசு பேருந்துகளில் கட்டணம் வசூல் : அமைச்சர் தகவல்..?

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருந்ததால், கடந்த 68 நாட்களாக தமிழகத்தில் அரசு பஸ்கள் இயங்கவில்லை. ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், சில தளர்வுகளை அரசு அறிவித்தது. அதன்படி 60 சதவீத பயணிகளுடன் இன்று முதல் பஸ்களை இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 6 மண்டலங்களில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

டிரைவர்கள், கண்டக்டர்கள் கைகளில் கையுறைகள் மற்றும் மாஸ்க் அணிந்து பஸ்களை இயக்குகின்றனர். பயணிகள் நின்று பயணிக்க அனுமதிக்கவில்லை. 3 பேர் அமரும் இருக்கைகளில் 2 பேரும், 2 பேர் அமரும் இருக்கைகளில் ஒருவரும் அமர அனுமதிக்கப்பட்டனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பஸ்கள் போக்குவரத்து துவங்கியது.

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-மக்களின் தேவைக்கேற்ப பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்படும். காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அரசு பேருந்துகள் இயக்கப்படும்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை முதல் அரசு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தில் உள்ள மார்க்கெட் இடம் மாற்றம் செய்யப்பட்டு பேருந்துகள் ஓடத்தொடங்கும். அரசு பேருந்துகளில் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படுகிறது.அரசு பேருந்து ஊழியர்கள் சம்பளம் பிடித்தம் செய்யப்படவில்லை. பேருந்துகளில் Cashless Transaction முறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.QR Code மூலமாக எந்தவொரு Cashless Transaction -ம் அனுமதிக்கப்படும். சோதனை முறையில் முதற்கட்டமாக 2 பேருந்துகளில் Paytm மூலம் Transaction செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave your comments here...