பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் செயலாளராக எஸ்.கோபாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் நியமனம் – தமிழகத்திற்கு தனிக்கவனம்..?

இந்தியாதமிழகம்

பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் செயலாளராக எஸ்.கோபாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் நியமனம் – தமிழகத்திற்கு தனிக்கவனம்..?

பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் செயலாளராக எஸ்.கோபாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் நியமனம் –  தமிழகத்திற்கு  தனிக்கவனம்..?

பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளராக தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கோபாலகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் செயலாளராக தமிழகத்தை சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி கோபாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை பிரதமர் மோடி தலைமையில் நடந்த நியமன குழு அளித்துள்ளது. 1991ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., பேட்ஜ் அதிகாரியான அவர் தற்போது, தகவல் தொழில்நுட்பத்துறை கூடுதல் செயலாளராக உள்ளார்.

சென்னை ஐ.ஐ.டி.,யில் எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பட்டப்படிப்பு படித்த அவர், பெங்களூருவில் உள்ள ஐ.ஐ.எம்., மில் பட்ட மேற்படிப்பு படித்துள்ளார். டெவலெட்மென்ட் ஸ்டடிஸ் தொடர்பாக நெதர்லாந்தின் ரோட்டார்டேமில் உள்ள எஸ்ராமஸ் பல்கலையில் பட்டம் பெற்றுள்ளார்.

இவர் ஏற்கனவே தமிழகத்தில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர். நியாய விலை கடைகளுக்கு வழங்கும் நுகர்வோர் துறையில் சிறப்பாக பணியாற்றினார். நியாய விலைக்கடைக்கடைகளில் வழங்கும் உணவு பொருட்கள் எடை குறைவாக வழங்குவதாக வந்த புகாரினை அடுத்து சி.சி.டிவி கேமரா ஆன்லைன் மூலம் கண்காணிக்கப்பட்டு மக்களுக்கு முறையாக உணவு பொருட்கள் வழங்கிட வழி வகுத்தவர்.நியாய விலைக்கடைகளில் வழங்கும் பருப்பு, உழுந்து மற்றும் அரசு பள்ளிக்கூடங்கள், அங்கன் வாடிகளில் வழங்கப்படும் முட்டை கொள்முதல்களை தரகர்கள் இடையூறு இல்லாமல் நியாமான விலையில் கொள்முதல் செய்து மக்களுக்கு முறையே வழங்குவதில் வழிவகை செய்தவர்.

இதனால் தங்களுக்கு கமிஷன் கிடைக்கலியே என ஏங்கிய சில முதலைகளின் மிரட்டல்களுக்குள்ளானார். கோபாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் போல் தமிழகத்தில் பல நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு சென்றனர். காரணம்.? தமிழகத்தில் பணியாற்ற வேண்டுமானால் சிலரின் நிர்பந்தங்களுக்குட்பட்டு அவர்கள் சொல்லும் கோப்புகளில் கை எழுத்து போட வேண்டும். அப்படி போட்டால் கை நிறைய கிம்பளம் கிடைக்கும் மக்கள் நலனை பற்றி அறிய வேண்டிய அவசியமும் இல்லை..! இப்படி கூட்டணி வைத்து மனசாட்சியே இல்லாமல் மக்களின் பணத்தை சுருட்ட விரும்பாத நேற்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் கோபாலகிருஷ்ணன் அவர்களும் ஒருவர்.

ஆகவே அவர் மத்திய அரசின் தகவல் தெ௱ழில் நுட்பபிரிவில் மாறுதாலாகி சென்றார். நாட்டுபற்றும், மக்களின் மன நிலைகளையும் நன்றாக அறிந்த எஸ். கோபாலகிருஷ்ணன் அவர்களை பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் செயலாளராக நியமிக்கபட்டதை தமிழகத்தில் உள்ள தேசப்பற்றாளர்களும் கருத்தியல்வாதிகளும் சமூக ஆர்வலர்களும் மிகவும் பாராட்டுகின்றனர்.

ஆகவே தமிழகத்தில் தற்போது காணப்படும் அரசியலில் யார் யார்..? எப்படி செயல்படுகிறார்கள் என்றும்.! மத்திய அரசின் நிதிகளை மக்களின் பெயரை சொல்லி போலி பில் போட்டு தங்களது குடும்ப வளர்ச்சிக்கு யார் யார் பயன் படுத்தினார்கள் என்பதும் நன்கு அறிந்தவர். ஆகவே தமிழகத்தில் வரும் சட்டமன்ற பொது தேர்தலில் பாஜக மக்களிடம் எவ்வாறு அணுக உள்ளது எனவும், தற்போதைய ஆட்சியாளர்களை பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் எனவும் துல்லியமாக நாடி பிடித்து செயல்படக்கூடிய திறமையான, நேற்மையான வாய்மையானவர் என்றால் அது எஸ். கோபாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.என்பதில் மாற்றமில்லை என்பதுதான் தமிழகத்தில் பலரின் கருத்தாகும் என்பது குறிப்பிடதக்கது.

VS.Raman
Senoir Journalist

Leave your comments here...