2வது முறையாக பிரதமராக பொறுப்பேற்று ஒராண்டு நிறைவு: ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள சாதனைகள் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்…!!

இந்தியா

2வது முறையாக பிரதமராக பொறுப்பேற்று ஒராண்டு நிறைவு: ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள சாதனைகள் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்…!!

2வது முறையாக பிரதமராக பொறுப்பேற்று ஒராண்டு நிறைவு: ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள சாதனைகள் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்…!!

பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2-வது முறையாக மத்தியில் பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு.தமது ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள சாதனைகள் குறித்த கடிதத்தை நாட்டு மக்களுக்கு எழுதியுள்ளார் பிரதமர்.

இது குறித்து அவர எழுதியுள்ள கடிதத்தில் : நாடு ஒரு வரலாற்று திருப்பத்தை ஏற்படுத்தி வேகமாக முன்னேறியது. ஆனால், கொரோனா நெருக்கடி காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள், சிறு, குறு தொழில் செய்வோர், தொழிலாளர்கள் என பலரும் துன்பத்திற்கு ஆளானார்கள். கொரோனா தொற்று தடுப்பில் இந்தியா எடுத்த சிறப்பான முடிவுகளை போல, பொருளாதார மறு துவக்கத்திலும், இந்தியா உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக சிறந்த முடிவுகளை மேற்கொள்ளும்.
இந்த நெருக்கடியான காலகட்டத்தில், யாரும் அசாதாரண சூழலை எதிர்கொள்ளவில்லை எனக்கூறிவிட முடியாது. நம் நாட்டின் தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், சிறு, குறு தொழிலாளர்கள், கைவினை கலைஞர்கள், வணிகர்கள் உள்ளிட்ட பலர் இக்காலகட்டத்தில் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நெருக்கடிகள் பேரழிவுகளாக மாறாமல் நாம் பார்த்து கொள்ள வேண்டும். பல்லாயிரகணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கு சைக்கிள் மூலமும், வெறும் கால்களுடன் நடந்தும், லாரிகளின் பயணித்தும் செல்கின்றனர்.ஏராளமானோர் வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர். இதன் காரணமாக இளைஞர்கள் விரக்தியடைந்துள்ளனர். நம் நாடு, பல எதிர்ப்புகளையும், சிக்கல்களையும், சவால்களையும் எதிர்கொண்டுள்ளன. நான் தேசத்தின் முன்னேற்றத்திற்காக இரவு, பகலாக உழைக்கிறேன். ஏனெனில், குறைபாடுகள் இருக்கலாம். ஆனால், நாட்டு மக்களிடம் குறைபாடுகள் இருக்க முடியாது. ஆகவே நமது மக்களையும், அவர்களின் பலத்தையும் நான் நம்புகிறேன். நீங்களும் என்னை நம்ப வேண்டும். சர்வதேச அளவில், இது நெருக்கடியான காலகட்டம்தான். ஆனால், இந்தியாவிற்கு இது ஒரு உறுதியான தீர்வுக்கான நேரமாகும். நாட்டின் 130 கோடி மக்களும் ஒருபோதும், தவறான பாதையில் வழிநடத்தப்படமாட்டார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.


கடந்த ஆண்டு இதேநாளில், இந்தியாவிற்கு ஒரு பொற்காலம் துவங்கியது. பல காலகட்டங்களுக்கு பிறகு மக்கள் முழு பெரும்பான்மையுடன் முந்தைய ஆட்சியில் இருந்த அதே கட்சிக்கு ஓட்டு போட்டனர். 130 கோடி இந்திய மக்கள் முன், நான் தலை வணங்குகிறனே். சாதாரண காலகட்டங்களில் நான் உங்கள் மத்தியில் இருந்துள்ளேன். ஆனால், இது சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டிய நேரம் இது. எனவே, இந்த கடிதத்தின் மூலம் உங்களின் ஆசிர்வாதங்களை நான் தேடுகிறேன். உங்களின் அன்பால், எனக்கு புதிய பலம் கிடைக்கிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு நிர்வாகமானது, ஊழலில் இருந்து தன்னை தனியே பிரித்து கொண்டது. நேர்மையான நிர்வாகமாக மாறியுள்ளது. நாட்டு மக்களின் கவுரவம் கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக ஏழைகளின் கவுரவம் கணிசமாக அதிகரித்துள்ளது. ஆட்சிக்கு வந்ததில் இருந்து சில முக்கிய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. கடந்த 2014 முதல் 2019 ஆண்டுகளில், இந்தியாவின் கவுரவம் உயர்ந்தது. ஏழைகளின் கண்ணியம் உறுதிபடுத்தப்பட்டது. நாடு முழுவதும், இலவச காஸ், இலவச மின்சாரம், வழங்கப்பட்டது. தூய்மைப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. அனைவருக்கும் வீடு கிடைப்பதற்கான திட்டம் விரைவுபடுத்தப்பட்டது. 2016 ல் சர்ஜிக்கல் ஸ்டிரைக், 2019 ல் பாகிஸ்தான் எல்லையில் விமானப்படை தாக்குதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.


அதேநேரத்தில் நீண்ட காலமாக கோரிக்கையில் இருந்த ஒரே ரேங்க் ஒரே பென்சன், ஒரு நாடு ஜிஎஸ்டி, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. 2019ம் ஆண்டு, இதே ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக மட்டும் அல்லாமல், இந்தியா புதிய உச்சத்தை அடைய வேண்டும் என்பதற்காகவும் மக்கள் எங்களுக்கு ஓட்டளித்தனர். இந்தியாவை சர்வதேச தலைவராக வேண்டும் என எண்ணினர். மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், கடந்த ஓராண்டில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் மூலம், நாட்டு மக்களிடையே தேசிய ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பின் உணர்வை வளர்த்தது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ராமர் கோயில் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய ஒருமித்த தீர்ப்பு, இணக்கமான சூழ்நிலையை கொண்டு வந்தது. முத்தலாக் முறை வரலாற்றின் குப்பை தொட்டியில் போடப்பட்டது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் இந்திய பன்முகத்தன்மையின் வெளிப்பாடு. இந்தியாவின் வளர்ச்சிப்பாதையில் முன்னேறி செல்ல பல நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்.

முப்படைகள் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த முப்படை தலைமை தளபதி பதவி உருவாக்கப்பட்டது. மிஷன் கங்கயான் திட்டத்திற்கான ஏற்பாடுகளிலும் இந்தியா இறங்கியுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 9.50 கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் 72 ஆயிரம் கோடி ரூபாய் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. ஜல்ஜீவன் திட்டம் மூலம் கிராமப்புறங்களில் உள்ள 15 கோடி வீடுகளுக்கு பைப் மூலம் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும். கால்நடைகளின் ஆரோக்கியத்திற்கு இலவச தடுப்பூசி போடப்படுகிறது. நாட்டின் வரலாற்றில், விவசாயிகள், பண்ணை தொழிலாளர்கள், சிறு வணிகர்கள், முறைசாரா தொழிலில் உள்ள தொழிலாளர்களுக்கு 60 வயது நிரம்பியவுடன் மாதம் 3 ஆயிரம் ரூபாய் பென்சன் கிடைக்க உள்ளது.சுய உதவி குழுக்களில் உள்ள 7 கோடி பெண்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் ரூ.10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தனது அரசின் கொள்கைகள் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகளால் கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இடையேயான இடைவெளி குறைந்துள்ளது. இது போன்ற பல வரலாற்று முடிவுகள் இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எடுக்கப்பட்ட பல முடிவுகளை அரசு வீரியத்துடன் இனி வரும் காலகட்டங்களில் அமல்படுத்தும்.

கொரோனா தொற்று நமது நாட்டில் பாதிப்பை ஏற்படுத்திய துவங்கியவுடன், இந்தியா , உலகிற்கு பிரச்னையாக மாறக்கூடும் என பல உலக நாடுகள் கருதின. ஆனால், இன்று பல உலக நாடுகள் நம்மை பார்க்கும் விதத்தை மக்களாகிய நீங்கள் மாற்றியமைத்துள்ளீர்கள். இந்தியாவின் ஆற்றல் என்பது கூட்டு வலிமை என்பதை நிரூபித்துள்ளீர்கள். இந்த ஆற்றலானது வளமான பல நாடுகளுடன் ஒப்பிடுகையில் இணையற்றது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட உடன், தொற்றுக்கு எதிராக களத்தில் நின்றவர்களுக்கு ஆதரவாக ஒற்றுமையோடு கைதட்டி, விளக்கேற்றி, தங்களுடைய ஒற்றுமையை மக்களாகிய நீங்கள் வெளிக்காட்டினீர்கள். இவ்வாறான நெருக்கடி நிறைந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்கள் தங்களது ஒற்றுமையை நிரூபித்துள்ளனர். இவ்வாறு அந்த கடிதத்தில் பிரதமர் கூறியுள்ளார்.

Leave your comments here...