இந்திய பெண் ராணுவ மேஜர் ஜெனரல் சுமன் கவானிக்கு ஐநாவின் உயரிய விருது..!

இந்தியாஉலகம்

இந்திய பெண் ராணுவ மேஜர் ஜெனரல் சுமன் கவானிக்கு ஐநாவின் உயரிய விருது..!

இந்திய பெண் ராணுவ மேஜர் ஜெனரல் சுமன் கவானிக்கு  ஐநாவின் உயரிய விருது..!

2019ல் தெற்கு சூடானில் ஐக்கிய நாடுகள் சபை மிஷனில் (UNMISS) பெண் அமைதிக் காப்பாளராகப் பணியாற்றிய இந்திய இராணுவ அதிகாரி மேஜர் சுமன் கவானிக்கு பெருமை மிகுந்த ”ஆண்டின் சிறந்த ஐக்கிய நாடுகள் சபை இராணுவப் பாலின சமத்துவ ஆதரிப்பாளர் விருது” 29 மே 2020ல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

சர்வதேச ஐக்கிய நாடுகள் சபை அமைதிக் காப்பாளர்கள் தினத்தன்று நியூயார்க்கில் உள்ள ஐ.நா.தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்படும் ஆன்லைன் நிகழ்ச்சியில் ஐ.நா.தலைமைச் செயலாளர் திரு அன்டோனியோ குட்டெர்ரஸ் அவர்களிடம் இருந்து மேஜர் சுமன் கவானி இந்த விருதைப் பெறுவார். மேஜர் சுமன் கவானி, பிரேசில் கப்பல் படை அதிகாரி கர்லா மோன்டீரோ தெ காஸ்ட்ரோ அரௌஜோ என்பவருடன் சேர்ந்து இந்த விருதைப் பெறுவார்.


மேஜர் சுமன் நவம்பர் 2018 முதல் டிசம்பர் 2019 வரை தெற்கு சூடானில் ஐக்கிய நாடுகள் சபை மிஷனில் இராணுவ கூர்நோக்குநராகப் பணியாற்ற உள்ளார். அங்கு பணியாற்றிய போது, மிஷனில் உள்ள இராணுவ கூர்நோக்குபவர்கள் எதிர்கொள்ளும் பாலினச் சமத்துவப் பிரச்சினைகளுக்கு இவரே முதன்மைத் தொடர்பாளராகவும் இருந்துள்ளார். மிகக்கடினமான களச்சூழல்களின் கீழ் ஏற்படும் சிரமங்கள் பலவகைப்பட்டதாக இருந்தாலும் கூட இவர் பாலினச் சமத்துவத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக ஆண்கள், பெண்கள் கூட்டு இராணுவ அணிவகுப்பை ஊக்குவித்தார்.


மிஷனின் திட்டமிடலிலும் இராணுவ நடவடிக்கைகளிலும் பாலினச் சமத்துவப் பார்வையை ஒருங்கிணைப்பதற்காக தெற்கு சூடான் முழுவதும் மிஷன் குழுக்கள் உள்ள இடங்களுக்கு இவர் சென்று உள்ளார். நெய்ரோபியில் நடைபெற்ற போர் தொடர்பான பாலியல் வன்முறை (RSV) குறித்த சிறப்புப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். குறிப்பாக போர் தொடர்பான பாலியல் வன்முறைகளில் இருந்து குடிமைச் சமூகத்தைப் பாதுகாக்க, பாலினச் சமத்துவப் பார்வையானது எவ்வாறு உதவும் என்று இவர் பல்வேறு ஐ.நா.சபை அமைப்புக் கூட்டங்களில் பங்கேற்று பேசியுள்ளார்.

தெற்கு சூடானில் ஐக்கிய நாடுகள் சபை மிஷனின் முன்னெடுப்புகளுக்கு ஆதரவாக இருந்ததோடு தெற்கு சூடான் அரசுப் படையினருக்கும் போர் தொடர்பான பாலியல் வன்முறை விஷயங்களில் பயிற்சி அளித்துள்ளார். மேலும் தெற்கு சூடானில் ஐக்கிய நாடுகள் சபை மிஷனில் நடைபெற்ற ஐ.நா.அமைதிக் காப்பாளர்கள் தின அணிவகுப்பில் ஐ.நா.போலீஸ், இராணுவம் மற்றும் குடிமைச் சமூகத்தினரின் பன்னிரெண்டு பிரிவினர்களை இவர் தலைமை ஏற்று வழி நடத்தினார்.

Leave your comments here...