2-வது முறையாக பதவியேற்ற ஒராண்டு நிறைவு செய்த பிரதமர் மோடி – 62 சதவீத மக்கள் ஆதரவு .! எதற்கு தெரியுமா…?
- May 29, 2020
- jananesan
- : 1265
- Narendramodi |
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 303 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியை பாஜக (தேசிய ஜனநாயகக் கூட்டணி) தக்க வைத்துக் கொண்டது. இதன் மூலம், நாட்டின் பிரதமராக தொடர்ந்து 2-வது முறையாக பதவியேற்று வரலாற்று பெருமையை நேரு, இந்திரா காந்தி ஆகியோருக்கு அடுத்தபடியாக நரேந்திர மோடி பெற்றார்.
பிரதமராக 2-வது முறையாக நரேந்திர மோடி பதவியேற்று வரும் 30ஆம் தேதி பா.ஜ.க ஒராண்டு ஆட்சியை நிறைவு செய்கிறது. இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு வருடங்களாக நிலுவையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளது.பாஜக ஆட்சிக்கு வந்த பின், காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியது, முத்தலாக் சட்டம் நிறைவேற்றப்பட்டது, அயோத்தி வழக்கை சுமூகமாக முடித்தது உள்ளிட்டவற்றுக்கு பெரும்பாலோனார் ஆதரவு தெரிவித்துள்ளனர். வரும் 30ஆம் தேதி ஓராண்டு நிறைவு விழாவை நாடு முழுவதும் கொண்டாட அந்தக் கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனிடையே நாடு முழுவதும் மக்களிடையே கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில் மோடி தலைமையிலான பா.ஜ.,அரசு கொரோனா தொற்றை திறம்பட கையாண்டு வருவதாக 62 சதவீதம் பேரும் ஓரளவு திறம்பட கையாண்டதாக 31 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
Leave your comments here...