இந்து சமயத்தை இழிவுபடுத்துவதா..? ஜீ தமிழ் தொலைக்காட்சி அர்ஜூன் சம்பத் எச்சரிக்கை..!
- May 29, 2020
- jananesan
- : 2081
- Arjun sampath
இணையதளங்களில் பிரபலமான ZEE 5 ஆன்லைன் சேனலில் சமீபத்தில் Godman என்ற வெப் சீரிஸ் டீசர் வெளியாகி குறிப்பிட்ட சமூகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்து சமயத்தை இழிவுபடுத்தும் வகையில், சாதி கலவரத்தை தூண்டும் உள்நோக்கத்துடன், பரபரப்பு மற்றும் பதட்டத்தை ஏற்படுத்தி விளம்பரம் தேடிக்கொள்ளும் குறுக்கு புத்தியுடன் வெளியிடப்பட்டுள்ள டீசர் காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என அர்ஜுன் சம்பத் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அர்ஜூன் சம்பத் வெளியீடுள்ள அறிக்கையில்:- Godman பெயரில் திரு.பாபு யோகேஸ்வரன்இயக்கத்தில், திரு இளங்கோ தயாரிப்பில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் zee5 என்பதில் தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ள டீசர் பட காட்சிகளில் இந்து சாமியார்களை அவமானப்படுத்தும் வகையிலும், இந்துசமய சின்னங்களான காவி உடை, ஓம் உள்ளிட்டவற்றை அவமானப்படுத்தும் வகையிலும், மது அருந்துவது போன்றும் ஆபாசமாகவும் வன்முறையாகவும் காட்சிகள் அமைந்துள்ளன. குறிப்பிட்ட சாதியை சொல்லி அவமானப்படுத்தும் வகையிலும் வசனங்கள் அமைந்துள்ளன.
இது தமிழகம் முழுக்க அனைத்து சமுதாயத்தைச் சார்ந்தவர்களும் ஒப்புக்கொள்ள முடியாத வகையில் உள்ளது. இந்து தமிழர்களின் சமய உணர்வுகளை, பக்தி உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் உள்நோக்கத்துடன் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. உலகப்புகழ்பெற்ற சுவாமிநாராயண் அமைப்பினைச் சார்ந்த துறவிகள் அணிந்து கொள்ளுகின்ற காவி உடையை போல அணிந்து அராஜகத்தில் ஈடுபடுவது போல காட்சிகள் அமைந்துள்ளன.
இதுபோன்று மிகுந்த ஆபாச காட்சிகளும் இந்துத்தமிழர்களின் கடவுள்களையும் குறிப்பிட்ட சமூகத்தின் பெயரைச்சொல்லி கேலி கிண்டல் செய்து படக்காட்சிகள் திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்து தமிழர்களின் சமுதாயத்தை கொச்சைப்படுத்தும் படியாக காட்சிகளை கொண்டுள்ள டீசரை உடனடியாக தடை செய்ய வேண்டும் மேற்படி படக்காட்சிகளை அமைத்த, தயாரித்த, உருவாக்கிய, இயக்கிய, தயாரிப்பாளர் இளங்கோ, இயக்குனர் பாபு யோகேஸ்வரன், தொடராக ஒளிபரப்ப உள்ள ஜீ தொலைக்காட்சி நிறுவனம் ஆகியோரின் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
இதுகுறித்து தணிக்கைத்துறை, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், மாண்புமிகு தமிழக முதல்வர், காவல்துறை தலைவர், ஆகியோருக்கு புகார் மனுக்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. நீதி கிடைக்காவிட்டால் தொலைகாட்சி நிறுவனத்தை முற்றுகை போராட்டம் நடத்துவோம் என தயாரிப்பாளரை எச்சரிக்கின்றோம் என கூறியுள்ளார்.
Leave your comments here...