ப்ளு வெல் போல் உயிர் பலி வாங்கும் பப்ஜி கேம்மை தடை செய்யவேண்டும் ; விஎம்எஸ்.முஸ்தபா வேண்டுகோள்..!
- May 22, 2020
- jananesan
- : 1817
- PUBG
உயிர் பலி வாங்கும் பப்ஜி விளையாட்டை தடை செய்யவேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா மத்திய மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளர்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் கமலா நகரைச் சேர்ந்த குமார் என்பவரின் 16 வயது மகன் சதீஷ்குமார். குமார பாளையத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் டெக்ஸ்டைல் டிசைனிங் முதலாமாண்டு படித்து வந்தார்.ஊரடங்கு காரணமாக, வீட்டில் தாய் மீனாவின் செல்போனில் தூங்கும் நேரம் தவிர எல்லா நேரமும் கேம் விளையாடி வந்துள்ளார். அதிக நேரம் கேம் விளையாடிதால், செல்போன் பழுதடைந்துள்ளது. அதனால், கோபித்துக் கொண்ட மகனை சமாதானம் செய்ய தந்தை செல்போனை பழுது பார்த்து கொடுத்துள்ளார்.சதீஷ்குமாரின் கேம் உலகத்தில் பகல், இரவு இல்லை. சாப்பிடும்போது கூட கேமில்தான் மூழ்கியிருப்பார் என்கிறார்கள் அவர்கள் குடும்பத்தினர்.
கடந்த வாரம் வீட்டிற்கு அருகில் பழைய மாட்டுச்சந்தை திடலில் அமர்ந்து சதீஷ்குமார் செல்போனில் கேம் விளையாடியுள்ளார்.மற்ற நண்பர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென, வாயில் நுரை தள்ளி சதீஷ்குமார் மயக்கமடைந்துள்ளார் உடனே, அருகில் இருந்த நண்பர்கள் அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்குள்ள மருத்துவர் அவர் உயிரிழந்ததாக அறிவித்தனர். இந்த செய்தியை கேள்விப்பட்ட சதீஷ்குமாரின் கும்பத்தினரும், நண்பர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
இப்படி பல குடும்பத்தினர் தங்களது பிள்ளைகளை இழந்து தவித்து வருகின்றனர். கடந்த காலங்களில் ப்ளு வெல் விளையாட்டால் பல மாணவர்கள், இளைஞர்கள் பலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. வருங்கால இந்தியாவை உருவாக்ககூடிய மாணவ, இளைஞர் சமுதாயத்தை பப்ஜி போன்ற ஆன்லைன் விளையாட்டால் இழந்து வருவது வேதனை அளிக்கிறது. ஆகவே மாணவர்கள், இளைஞர்கள் உயிரை காக்கும் பொருட்டு பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை தமிழக அரசு தடை செய்ய வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
Leave your comments here...