பிரதமரின் ‘பிஎம் கேர்ஸ்’ நிதி குறித்து அவதூறு: சோனியா உள்பட காங்கிரஸ் தலைவர்கள் மீது கர்நாடகாவில் வழக்கு பதிவு…!

அரசியல்

நாட்டில் எந்தவொரு அவசர நிலை அல்லது துயர சூழ்நிலையையும் கையாள்வதற்கான நோக்கத்துடன் இந்திய அரசு ‘பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம்’ (PM CARES Fund) என்ற பெயரில் நிதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிதிக்கு அரசு அமைப்புகள், தொழிலதிபர்கள், நிறுவனங்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் நிதி அளித்து வந்தனர்.

இதனிடைய இதில் வெளிப்படைத் தன்மை இல்லை என குற்றம்சாட்டிய காங்கிரஸ், தனது ட்விட்டர் பக்கத்தில், பிஎம் கேர்ஸ் நிதியில் முரண்பாடுகள் இருக்கின்றன என்று விமர்சித்தது. மேலும், இவ்வாறு சேகரிப்படும் நிதியின் நோக்கம் குறித்தும், அது எங்கு சேகரிக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பியதோடு, சேகரிக்கப்பட்ட பணம் மோடியின் பல வெளிநாட்டு பயணங்களுக்கு நிதியுதவி செய்வதற்காக இருக்கும் என்று குற்றம்சாட்டியிருந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக கர்நாடகா மாநிலம் சிவமோகாவில் இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில், காங்., தலைவர் சோனியா உட்பட சில காங்., தலைவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 153 மற்றும் 505 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave your comments here...