மத்திய அமைச்சராகவும் செயல்படுவார் – உலக சுகாதார அமைப்பின், செயற்குழு தலைவராக, நாளை பொறுப்பேற்கிறார் ஹர்ஷ் வர்த்தன்..!

இந்தியா

மத்திய அமைச்சராகவும் செயல்படுவார் – உலக சுகாதார அமைப்பின், செயற்குழு தலைவராக, நாளை பொறுப்பேற்கிறார் ஹர்ஷ் வர்த்தன்..!

மத்திய அமைச்சராகவும் செயல்படுவார் – உலக சுகாதார அமைப்பின், செயற்குழு தலைவராக, நாளை பொறுப்பேற்கிறார் ஹர்ஷ் வர்த்தன்..!

கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் உலக நாடுகள் பங்கேற்றுள்ள இந்தநிலையில் உலக சுகாதார அமைப்பின் பங்கு என்பது மிகப்பெரியது. கொரோனா விவகாரத்தில் அமெரிக்கா, உலக சுகாதார அமைப்பைத் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தாலும், அந்த அமைப்பு தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் செயல்பட்டு வருகிறது

உலக சுகாதார அமைப்பின் செயற் குழுவில், 34 நாடுகளைச் சேர்ந்த மருத்துவ வல்லுனர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.இவர்களின் பதவிக் காலம், மூன்று ஆண்டுகள். தற்போது, இக்குழுவின் தலைவராக, ஜப்பானைச் சேர்ந்த, ஹிரோகி நகாடனி உள்ளார். இவரது பதவிக் காலம் முடிவடைவதையொட்டி, புதிய தலைவராக, ஹர்ஷ் வர்த்தன் பொறுப்பேற்க உள்ளார்.

இதற்கான தீர்மானத்தை, 194 நாடுகள் அடங்கிய, உலக சுகாதார சபை அங்கீகரித்துள்ளது. நாளை, சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில், உலக சுகாதார அமைப்பின், 147வது செயற்குழு கூட்டம், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நடைபெறுகிறது.

இதில், ஹர்ஷ் வர்த்தன் செயற்குழு தலைவராக பொறுப்பேற்பார். உலக நாடுகள் கொரோனா பாதிப்பைச் சந்தித்துள்ள சூழலில், ஹர்ஷ் வர்த்தன், உலக சுகாதார அமைப்பின் செயற்குழு தலைவராக பொறுப்பேற்பது, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது, கொரோனா பரவ, சீனாவும், அதற்கு துணையாக உலக சுகாதார அமைப்பும் உள்ளதாக, அமெரிக்க அதிபர், டிரம்ப் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், அதி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரியத் தலைவராக ஹர்ஷ் வர்தன் தேர்ந்தெடுக்கப்படும்பட்சத்தில், மத்திய அமைச்சராக தொடர்வாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், இந்த நிர்வாக வாரிய தலைமை பொறுப்பு என்பது முழுநேர பணி அல்ல. நிர்வாக சபையின் கூட்டங்களுக்கு மட்டும் அவர் தலைமை தாங்குவார். ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே இந்தக் கூட்டம் நடைபெறும். ஜனவரி மாதம் ஒரு கூட்டமும் பின் மே மாதம் இரண்டாம் கூட்டமும் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

Leave your comments here...