காஷ்மீரில் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கிச் சூடு..!

இந்தியா

காஷ்மீரில் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கிச் சூடு..!

காஷ்மீரில் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கிச் சூடு..!

ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரேதசம், ஸ்ரீநகரில் நேற்று (மே 18) இரவு போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் பயங்கரவாதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது.

ஜம்மு காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகர் அருகே உள்ள நவகடல் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில் ஜம்மு காஷ்மீர் போலீசார் மற்றும் சி.ஆர்.பி.எப் வீரர்கள் இணைந்து குறிப்பிட்ட இடத்தை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.


அப்போது, அங்கு மறைவிடத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.பயங்கரவாதிகள் மற்றும் போலீசாரிடையே சமீபத்தில் நடைபெற்ற முதல் தாக்குதல் இதுவாகும் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீநகரில் மொபைல் இணைய சேவை மற்றும் தொலைபேசி சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

Leave your comments here...